வழுக்கை தலை பின்னணியில் முக்கோண காதல் கதையாக உருவாகும் 'சொட்ட சொட்ட நனையுது'

Published By: Vishnu

16 Apr, 2025 | 03:31 AM
image

சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கான நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் நிஷாந்த் ரூசோ கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'சொட்ட சொட்ட நனையுது' என பெயரிடப்பட்டு, இதற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் நவீத் எஸ் ஃபரீத் இயக்கத்தில் உருவாகி வரும் 'சொட்ட சொட்ட நனையுது 'எனும் திரைப்படத்தில் நிஷாந்த் ரூசோ - வர்ஷினி - ஷாலினி-  ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ரயீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சித் உன்னி இசையமைத்திருக்கிறார்.  தலை முடி உதிர்வால் ஏற்படும் தோற்றத்தை மையப்படுத்தி நகைச்சுவையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை அட்லர் என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இளம் வயதில் நாயகனுக்கு தலையில் சொட்டை விழுந்து விடுகிறது. இந்த தருணத்தில் நாயகனுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்ய திட்டமிடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெறும் கலகலப்பான சம்பவங்களும் , அதிரடியான திருப்பங்களும் தான் இப்படத்தின் கதை'' என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த அறிமுக காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதிலும் வழுக்கை தலையை மையமாகக் கொண்டு முக்கோண காதலாக தயாராகி இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“உண்மையான காதலை தேடும் சராசரி பெண்...

2025-04-29 16:19:34
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'என் காதலே'...

2025-04-29 14:23:39
news-image

‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு...

2025-04-29 13:27:05
news-image

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன்...

2025-04-29 11:19:46
news-image

நடிகர் பிரசன்னா வெளியிட்ட தினேஷின் '...

2025-04-28 17:46:56
news-image

மே மாதத்தில் ரசிகர்களை சந்திக்கும் '...

2025-04-28 17:33:38
news-image

விரைவில் மீண்டும் வெளியாகிறது அஜித்குமாரின் '...

2025-04-28 17:46:38
news-image

நடிகர் ஆதம் ஹசன் நடித்திருக்கும் '...

2025-04-28 17:46:21
news-image

நடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் குற்றம்...

2025-04-28 17:47:19
news-image

யோகி பாபுவின் 'ஜோரா கையதட்டுங்க '...

2025-04-28 17:47:38
news-image

ஜுலையில் வெளியாகும் சூர்யா சேதுபதி நடிக்கும்...

2025-04-26 17:13:02
news-image

தேவயானி நடிக்கும் 'நிழற்குடை' படத்தின் இசை...

2025-04-26 16:25:11