நடிகர் சூர்யா நடிப்பில் எதிர்வரும் மே மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'ரெட்ரோ ' படத்தில் இடம்பெற்ற ' தி ஒன் ' எனும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள' ரெட்ரோ' திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ,ஜெயராம், கருணாகரன், நாசர் ,பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சிங்கம் புலி , நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்ரேயா சரண் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற ' ஒரு தீயில சொல்லெடுத்து..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இப்பாடலில் இடம்பெறும் றாப் இசையை பாடகர் ஷான் வின்சென்ட் டி பால் பாடியிருக்கிறார். இளைய தலைமுறை இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM