இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ .வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் இடி முழக்கம் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற கானா விளக்கு மயிலே எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதத்தில் படமாளிகையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய விருது பெற்ற படைப்பாளியான சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இடி முழக்கம் எனும் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் காயத்ரி சங்கர் சரண்யா பொன்வண்ணன் அருள்தாஸ் சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டைனராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரித்திருக்கிறார்.
மதுரைக்கு நடுவுல எங்க வீடு எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து எழுத கிராமிய பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். கிராமத்து பாணியிலான துள்ளல் இசையுடன் உருவாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். சீனு ராமசாமி - வைரமுத்து - என். ஆர். ரகுநந்தன் கூட்டணியில் உருவாகி இருக்கும் இடி முழக்கம் படத்தின் பாடலுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM