நடிகர் சூரி நடிக்கும் ' மாமன் ' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Vishnu

16 Apr, 2025 | 02:22 AM
image

'விடுதலை', 'கருடன்' படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' மாமன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' மாமன் ' எனும் திரைப்படத்தில் சூரி, ஐஸ்வர்ய லட்சுமி ,ராஜ்கிரண், சுவாசிகா, கீதா கைலாசம் , நிகிலா சங்கர், பால சரவணன் , விஜி சந்திரசேகர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவு குறித்த உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.

இதனிடையே இப்படத்தின் வணிக ரீதியான வெற்றியை பொறுத்துதான் நடிகர் சூரியின் நட்சத்திர அந்தஸ்து உறுதிப்படுத்தப்படும் என்பதால். அவரும், அவர் ரசிகர்களும் இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“உண்மையான காதலை தேடும் சராசரி பெண்...

2025-04-29 16:19:34
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'என் காதலே'...

2025-04-29 14:23:39
news-image

‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு...

2025-04-29 13:27:05
news-image

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன்...

2025-04-29 11:19:46
news-image

நடிகர் பிரசன்னா வெளியிட்ட தினேஷின் '...

2025-04-28 17:46:56
news-image

மே மாதத்தில் ரசிகர்களை சந்திக்கும் '...

2025-04-28 17:33:38
news-image

விரைவில் மீண்டும் வெளியாகிறது அஜித்குமாரின் '...

2025-04-28 17:46:38
news-image

நடிகர் ஆதம் ஹசன் நடித்திருக்கும் '...

2025-04-28 17:46:21
news-image

நடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் குற்றம்...

2025-04-28 17:47:19
news-image

யோகி பாபுவின் 'ஜோரா கையதட்டுங்க '...

2025-04-28 17:47:38
news-image

ஜுலையில் வெளியாகும் சூர்யா சேதுபதி நடிக்கும்...

2025-04-26 17:13:02
news-image

தேவயானி நடிக்கும் 'நிழற்குடை' படத்தின் இசை...

2025-04-26 16:25:11