செப்டம்பரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'மதராஸி'

Published By: Vishnu

16 Apr, 2025 | 02:20 AM
image

' அமரன்' எனும் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ' மதராஸி ' எனும் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தின் உருவாகி இருக்கும் ' மதராஸி ' எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் , ருக்மணி வசந்த்,  வித்யூத் ஜாம்ப்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுதீப் இலாமோன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மேலும் இப்படத்தின் பிரத்யேக காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற செய்திருந்தது . இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படங்கள் செப்டம்பரில் வெளியானால்... வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெறும் என்ற வணிக ரீதியிலான நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது. இந்தத் திரைப்படமும் 300 கோடி வசூலித்தால்...! தமிழ் சினிமாவின் 'பொக்ஸ் ஓபீஸ் சுப்பர் ஸ்டார்' விஜய் விட்டுச் செல்லும் இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் என திரையுலக வணிகர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“உண்மையான காதலை தேடும் சராசரி பெண்...

2025-04-29 16:19:34
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'என் காதலே'...

2025-04-29 14:23:39
news-image

‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு...

2025-04-29 13:27:05
news-image

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன்...

2025-04-29 11:19:46
news-image

நடிகர் பிரசன்னா வெளியிட்ட தினேஷின் '...

2025-04-28 17:46:56
news-image

மே மாதத்தில் ரசிகர்களை சந்திக்கும் '...

2025-04-28 17:33:38
news-image

விரைவில் மீண்டும் வெளியாகிறது அஜித்குமாரின் '...

2025-04-28 17:46:38
news-image

நடிகர் ஆதம் ஹசன் நடித்திருக்கும் '...

2025-04-28 17:46:21
news-image

நடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் குற்றம்...

2025-04-28 17:47:19
news-image

யோகி பாபுவின் 'ஜோரா கையதட்டுங்க '...

2025-04-28 17:47:38
news-image

ஜுலையில் வெளியாகும் சூர்யா சேதுபதி நடிக்கும்...

2025-04-26 17:13:02
news-image

தேவயானி நடிக்கும் 'நிழற்குடை' படத்தின் இசை...

2025-04-26 16:25:11