(ரொபட் அன்டனி)
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நாங்கள் அமைத்தே தீருவோம். இதனை நிர்மாணிப்பதற்கான உதவிகளை இந்தியாவிடம் உத்தியோகப்பூர்வமாக கோருவதற்கான கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாண மக்கள் இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பில் மிக்க மகிழ்ச்சியை என்னிடம் தெரிவித்தனர். எனவே இதற்காக நாம் சகல முயற்சிகளையும் எடுப்போம் என்றும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்கு கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுடன் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியையும் சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.
இது தொடர்பில் கேசரியுடன் கருத்து பகிர்கையிலேயே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜயசூரிய மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டினார்.
‘‘யாழ்ப்பாணத்துக்கு நான் வியாழக்கிழமை விஜயம் செய்து அங்கு மக்களுடன் கலந்துரையாடினேன். யாழ். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னுடன் உரையாடினர். கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக யாழில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் யாழ். மக்கள் என்னிடம் மிக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிநிதிகளுடன் இணைந்து நான் தற்போது இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியைப் பார்வையிட்டேன். யாழில் நாங்கள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை எப்படியாவது அமைப்போம். இதற்காக முழுமூச்சுடன் செயற்படுவோம்.’’ இவ்வாறு குறிப்பிட்டார் சனத் ஜயசூரிய.
அண்மையில் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்த போது 96ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி வீரர்களை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட சனத் ஜயசூரிய நெருக்கடி நேரத்தின் போது இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை அவதானத்தைப் பெற்றதாக அமைந்தது.
இது தொடர்பில் விரைவில் உத்தியோகப்பூர்வமாக கடிதமொன்றை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.
‘‘இந்தியப் பிரதமரை சந்தித்த போது நாங்கள் இந்தக் கோரிக்கையை. வாய்மூலம் விடுத்தோம். ஆனால் அது தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுக்கவேண்டியுள்ளது. எனவே விரைவில் இதற்கான உத்தியோகப்பூர்வமான கடிதம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படும்.’’ என்றும் சனத் ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM