ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் ' - சீமான்

Published By: Vishnu

16 Apr, 2025 | 02:07 AM
image

பொலிவுட் நடிகர் சன்னி தியோல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜாட்' எனும் இந்தி திரைப்படத்தில், ஈழ விடுதலைக்கு போராடியவர்களை பயங்கரவாதிகள் என குறிப்பிடப்படுவதால், அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும், மேலும் இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கை மூலமாக வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....

'' இந்தி மொழியில் வெளியாகியுள்ள 'திரைப்படம் 'ஜாட்., இப்படத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி 'யாழ்ப்பாணப் புலிப்படை' என்று உள்நோக்கத்துடன் பெயர்வைத்து, தமிழீழ விடுதலைப்போராட்டம் தவறானது என்பது போலவும், அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. முழுக்க முழுக்க தமிழர்கள் மீதான இனவெறுப்பினாலேயே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதை  எளிதில் உணர முடிகிறது.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவி, உலகத்தமிழர்களின் உள்ளத்தில் வைத்து வணங்கப்பெறுகின்ற எம்மாவீரத் தெய்வங்களை அவமதிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.

ஆகவே, ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு கடந்த காலங்களைப்போல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து 'ஜாட்' ( JAAT) திரைப்படத்தை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தும் எனவும் அறிவிக்கிறேன்.'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“உண்மையான காதலை தேடும் சராசரி பெண்...

2025-04-29 16:19:34
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'என் காதலே'...

2025-04-29 14:23:39
news-image

‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு...

2025-04-29 13:27:05
news-image

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன்...

2025-04-29 11:19:46
news-image

நடிகர் பிரசன்னா வெளியிட்ட தினேஷின் '...

2025-04-28 17:46:56
news-image

மே மாதத்தில் ரசிகர்களை சந்திக்கும் '...

2025-04-28 17:33:38
news-image

விரைவில் மீண்டும் வெளியாகிறது அஜித்குமாரின் '...

2025-04-28 17:46:38
news-image

நடிகர் ஆதம் ஹசன் நடித்திருக்கும் '...

2025-04-28 17:46:21
news-image

நடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் குற்றம்...

2025-04-28 17:47:19
news-image

யோகி பாபுவின் 'ஜோரா கையதட்டுங்க '...

2025-04-28 17:47:38
news-image

ஜுலையில் வெளியாகும் சூர்யா சேதுபதி நடிக்கும்...

2025-04-26 17:13:02
news-image

தேவயானி நடிக்கும் 'நிழற்குடை' படத்தின் இசை...

2025-04-26 16:25:11