18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் குறைந்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட ஆட்டத்தில் பஞ்சாபிடம் பணிந்தது  கொல்கத்தா 

Published By: Vishnu

16 Apr, 2025 | 01:47 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இன்றைய 31ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 16 ஓட்டங்களால் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிகொண்டது.

இந்த வருட ஐபிஎல் போட்டி ஒன்றில் இரண்டு அணிகளால் கூட்டாக பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இந்தப் போட்டியில் பதிவானது.

இரண்டு அணிகளும் சேர்ந்து சகல விக்கெட்களையும் இழந்து 206 ஓட்டங்களையே பெற்றன.

மல்லன்பூர், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பஞ்சாப் கிங்ஸ் 15.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

ப்ரியன்ஷ் ஆரியா (22), ப்ரப்சிம்ரன் சிங் (30) ஆகிய இருவரும் 20 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. பஞ்சாபின் 10 விக்கெட்கள் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

ஆரம்ப வீரர்களைவிட நெஹால் வதேரா (10), ஷஷாங் சிங் (18), சேவியர் பார்ட்லெட் (11) ஆகிய மூவரே இரண்டு இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுனில் நரேன் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

112 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தவறான அடி  தெரிவுகளால் சகல விக்கெட்களையும் தாரைவார்த்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான தொல்வியைத் தழுவியது.

அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (17), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (37) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தெம்பூட்டினர். ஆனால், கடைசி 8 விக்கெட்கள் வெறும் 33 ஓட்டங்களுக்கு வீழ்ந்தன.

மத்திய வரிசையில் அண்ட்றே ரசல் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: யுஸ்வேந்த்ர சஹால்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடைசியில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை...

2025-04-30 01:36:34
news-image

ப்ரதிக்கா சாதனை நிலைநாட்டிய மகளிர் மும்முனை...

2025-04-29 19:12:49
news-image

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், ஜெவ்னா கிங்ஸின் தொழில்முறை...

2025-04-29 17:16:24
news-image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு...

2025-04-29 11:27:01
news-image

சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ரி20இல் மிக...

2025-04-29 01:47:32
news-image

14 வயது சிறுவன் ஐபிஎலில் குறைந்த...

2025-04-29 00:48:06
news-image

இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இரண்டாவது...

2025-04-28 20:55:30
news-image

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை வீழ்த்தியது...

2025-04-28 01:51:26
news-image

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது மும்பை...

2025-04-27 20:55:35
news-image

மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்...

2025-04-27 18:43:08
news-image

முதலாவது இளையோர் ஒருநாள் போட்டியில் ஆகாஷ்...

2025-04-26 21:51:08
news-image

கடைநிலை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னையை...

2025-04-26 01:12:59