18இன் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்: பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் தனஞ்சனா; ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் மதுவன்த

Published By: Vishnu

16 Apr, 2025 | 01:45 AM
image

(நெவில் அன்தனி)

சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமான 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 100 மீற்றர் தகுதிகான் சுற்றின் இரண்டாவது போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கை வீராங்கனை தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ  நேரடியாக இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ அப் போட்டியை 11.91 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்றார்.

இன்று நடைபெற்ற மூன்று தகுதிகாண் போட்டிகள் நிறைவில் ஒட்டுமொத்த நிலையில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ மூன்றாம் இடத்தில் இருப்பதால் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த நிலையில் சீன வீராங்கனை ஸங் கியான் (11.75 செக்.) முதலாம் இடத்திலும் இந்திய வீராங்கனை ஆர்த்தி (11.85 செக்.) இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர்.

ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதியில் இலங்கை வீரர் மதுவன்த போகொட

ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதி ஓட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் இரேஷ் மதுவன்த போகொட தகுதிபெற்றார்.

அவரது சக வீரர் ஷானுக்க நெத்மல் கொஸ்தா முதலாவது அரை இறுதிப் போட்டியை 49.70 செக்கன்களில் நிறைவு செய்து 5ஆம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டி வாய்ப்பை தவறவிட்டார்.

இரண்டாவது அரை இறுதி ஓட்டப் போட்டியை 49.50 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றதன் மூலம் இரேஷ் மதுவன்த போகொட இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

இன்று இரவு நடைபெற்ற இரண்டு அரை இறுதிப் போட்டிகளின் நிறைவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற 8 வீரர்களில் போகொட, ஒட்டுமொத்த நிலையில் கடைசி இடத்தில் இருக்கிறார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அதிசயம் நிகழ்ந்தாலன்றி போகொடவுக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

கத்தார் வீரர் சமிர் மூசா ஹசன் (48.31 செக்.), சீன வீரர் லி யொங்ஜீ (48.59 செக்.), இந்திய வீரர் சய்யெத் சபீர் (48.89 செக்.), கத்தார் வீரர் ஹரூன் சாலே அஹ்மத் (48.90 செக்.), சவூதி அரேபிய வீரர் முசாத் ஒபெய்த் அல்சுபை (48.94 செக்.), சவூதி அரேபிய வீரர் மேஷால் அப்துல்லா ஹஸாஸி (49.26 செக்.),  சீன வீரர் லி ஸிங்ஹாஓ (49.28 செக்.) ஆகியோர் ஒட்டுமொத்த நிலையில் முறையே முதல் ஏழு இடங்களில் இருக்கின்றனர்.

ஆண்களுக்கான 100 மீற்றர் அரை இறுதிக்குஇலங்கையர் இருவர் தகுதிபெற்றனர்

ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் இருவரும் அரை இறுதிகளில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

முதலாவது தகுதிகான் ஒட்டப் போட்டியில் பங்குபற்றிய பசிந்து சந்தருவன் சில்வா (10.81 செக்.) நான்காம் இடத்தையும் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய சத்துஷ்க இமேஷ் சில்வா (10.79 செக்.) நான்காம் இடத்தையும் பெற்று அரை இறுதிகளுக்கு முன்னேறியுள்ளனர். அரை இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறும்.

பெண்களுக்கான 1500 மீற்றர் இலங்கை பங்குபற்றவில்லை

பெண்களுக்கான 1500 மீற்றர் இறுதிப் போடடிக்கு பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கை வீராங்கனைகளான நிதுக்கி ப்ரார்த்தனா, அயேஷா செவ்வந்தி ஆகிய இருவரும் போட்டியில் பங்குபற்றுவதை தவிர்த்துக்கொண்டனர்.

நான்கு வீராங்கனைகள் மாத்திரம் பங்குபற்றிய அப் போட்டியில் சீனாவுக்கு தங்கப் பதக்கமும் லெபனான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூரியவன்ஷியின் அசுர வேக துடுப்பாட்ட உதவியுடன்...

2026-05-20 04:56:02
news-image

பாக். வீரர்கள் மசூத், அகா, ரிஸ்வான்...

2026-05-19 23:10:45
news-image

மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்டத்தில் பங்கேற்கும்...

2026-05-19 18:17:47
news-image

இலங்கை மகளிர் 'ஏ' ரி20 குழாத்தில்...

2026-05-19 15:14:35
news-image

LPL 6ஆவது அத்தியாயத்தில் ஜெவ்னா கிங்ஸின்...

2026-05-19 13:27:27
news-image

ப்ளே ஓவ் தகுதியை சன்ரைசர்ஸ், குஜராத்...

2026-05-19 10:03:45
news-image

பங்களாதேஷின் முஷ்பிக்குர், லிட்டன் தாஸ் துடுப்பாட்டத்தில்...

2026-05-19 03:17:48
news-image

இலங்கை - நியூஸிலாந்து மகளிர் ஏ...

2026-05-19 03:11:43
news-image

எல்பிஎல் 6ஆவது அத்தியாயம் எஸ்எஸ்சியில் ஆரம்பம்;...

2026-05-19 02:39:44
news-image

கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனையை புதுப்பித்தார்...

2026-05-18 17:23:02
news-image

மலேசியாவில் இடம்பெற உள்ள கராத்தே சாம்பியன்ஷிப்'...

2026-05-18 05:32:06
news-image

ராஜஸ்தான் றோயல்டஸுடனான போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு...

2026-05-18 05:27:04