(நெவில் அன்தனி)
சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி வீரர் ஜனித் லக்ஷான் ஜென்கின்ஸ் வென்று கொடுத்து வரலாறு படைத்தார்.
செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை ஜென்கின்ஸ் வென்றுகொடுத்தார்.
12 வீரர்கள் பங்குபற்றிய முப்பாய்ச்சல் போட்டியில் தனது 6ஆவதும் கடைசியுமான முயற்சியில் 15.10 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஜென்கின்ஸ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அவர் தனது 6 முயற்சிகளிலும் முறையே 14.54 மீ., 14.79 மீ., 14.96 மீ., 14.89 மீ., 14.77 மீ., 15.10 மீ. தூரங்களைப் பதிவுசெய்தார்.
கடைசி முயற்சியில் அவர் பதிவுசெய்த 15.10 மீற்றர் தூரமானது அவரது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும்.
ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சீன வீரர் டொஹ் ஸியுவான் 15.53 மீற்றர் தூரத்தை தனது கடைசி முயற்சியில் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
மற்றொரு சீன வீரரான மா போயு (14.97 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இந்தப் போட்டியில் பங்குபற்றிய மற்றொரு இலங்கை வீரர் சசிந்து ஹன்சன ஜயசிங்க (14.55 மீற்றர்) 7ஆம் இடததைப் பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM