தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
என்.பி.பி. ஜே.வி.பி இரண்டும் ஒன்றுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. கொள்கை ஒன்றுதான். சர்வதேசத்தின் உதவிக்கான வேறு வேறு தோற்றப்பாட்டை காடுகின்றனரே தவிர வேறெந்த விடயமும் இல்லை.
கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் தமிழ் மக்களை மிரட்ட நினைத்தால் அது அவரது இயலாமையாக இருக்கும். ஏனெனில் தமிழ் தரப்பு இவரைப்போல பலரை, பலரது மிரட்டலை கண்டது. இவரது புலுட இனியும் தமிழ் மக்களுடம் எடுபடாது.
கடந்த தேர்தல் காலத்தில் சொன்னதை செய்வதற்கு அவர்கள் தற்போது தயாராக இல்லை. ஏனெனில் தங்களுக்கு எதிராக வர இருக்கின்ற மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் தேவையாக இருக்கின்றது.
அத்துடன் அபிவிருத்தி பற்றி பேசும் இவர்கள் புதிதாக எந்தவொரு அபிவிருத்தியையும் செய்யவில்லை.
குறிப்பாக பொய் மட்டுமே இவர்களது செயற்பாடுகளாக இருக்கின்றது. சொல்லாடல்கள் வித்தியாசமாக இருக்கின்றதே தவிர உள்ளடக்கங்கள் ஒன்றுதான்.
குறிப்பாக கடந்த அரசுகளின் நிலைப்படே இவர்களது பயணமும் தொடர்கின்றது.
குறிப்பாக புத்த விகாரை கட்டுமாணங்கள் தொடர்கின்றன, கைதிகள் விடுவிக்கப்படவில்லை, இதை தடுக்கவும் இல்லை.
யாழ் . மாவட்டத்தில் இருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் எதை செய்தோம் என்பதை மக்களுக்கு கூறவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM