புதிய அரசியலமைப்பு மக்களின் அபிலாஷைகளுக்கும் இன மோதலுக்கும் நீடித்த தீர்வை வழங்கும் - அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

Published By: Vishnu

15 Apr, 2025 | 08:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக முரண்பாடற்ற தீர்வினை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். இந்த சட்டத்துக்கு எதிராகவே நாங்கள் செயற்பட்டோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கும், நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கும் கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து தீவிர கரிசணை கொண்டுள்ளோம்.

தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு தொடர்பான சட்டம் இயற்றப்படும். நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட குழு கடந்த வெள்ளிக்கிழமை கூடியது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது அரசாங்கத்தின் கொள்கை, ஆகவே இந்த சட்டத்தை இரத்துச் செய்து, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னிலைப்படுத்திய வகையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்பதை குறித்த குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வினை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். காலம் காலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறப்பு ஆணை வழங்கியுள்ளார்கள்.

பொருளாதார ஸ்திரப்படுத்தலுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மாகாண சபைத் தேர்தலை நடவத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-30 06:10:53
news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00