(நெவில் அன்தனி)
அபுதாபி, சய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியை எதிர்த்தாடிய இலங்கை ஏ அணி 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
அணித் தலைவர் சதீர சமரவிக்ரம குவித்த அபார சதம், லஹிரு உதார பெற்ற அரைச் சதம், டில்ஷான் மதுஷன்கவின் 4 விக்கெட் குவியல் என்பன இலங்கை ஏ அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் அயர்லாந்து ஏ அணியை 48 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை ஏ அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் ஏ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆப்கானிஸ்தான் ஏ அணியைப் போன்றே இலங்கை ஏ அணியின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.
காமில் மிஷார, நுவனிது பெர்னாண்டோ ஆகிய இருவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். (2 - 2 விக்.)
எனினும் அணித் தலைவருக்கே உரித்தான பாணியில் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம இரண்டு பெறுமதிமிக்க இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
மூன்றாவது விக்கெட்டில் ஆரம்ப வீரர் லஹிரு உதாரவுடன் 163 ஓட்டங்களைப் பகிர்ந்த சதீர சமரவிக்ரம, 4ஆவது விக்கெட்டில் சஹான் ஆராச்சிகேவுடன் மேலும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
லஹிரு உதார 83 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
சதீர சமரவிக்ரம 110 பந்துகளில் 16 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 129 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் கலில் அஹ்மத் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.
நான்கு ஓட்டங்களுக்குள் முதல் 3 விக்கெட்கள் சரிந்ததால் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் ஏ அணி, அதன் தலைவர் டார்விஷ் ரசூலி குவித்த அபார சதத்தினால் மீண்டெழுந்தது.
மிகவும் அபாரமாக அதேவேளை நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய டார்விஷ் ரசூலி, 147 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 155 ஓட்டங்களைக் குவித்தார்.
இதனிடையில் 4ஆவது விக்கெட்டில் இக்ரம் அலிகில்லுடன் 109 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் இஜாஸ் அஹ்மதுடன் 114 ஓட்டங்களையும் டார்விஷ் ரசூலி பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
இக்ரம் அலிகில் 32 ஓட்டங்களையும் இஜாஸ் அஹ்மத் 35 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த மூவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.
பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ஷிராஸ் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM