கிளிநொச்சியில் கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது.
கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞன் ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM