(நெவில் அன்தனி)
சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமான 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரை இறுதிகளில் பங்குபற்ற இலங்கையர் இருவர் தகுதிபெற்றுள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற முதலாம் சுற்றின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் ஷனுக்க நெத்மல் கொஸ்தா, அப் போட்டியை 49.85 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
அப் போட்டியில் கத்தார் வீரர் ஹறூன் சாலே அஹ்மத் (49.08 செக்.) முதலாம் இடத்தையும் சவூதி அரேபிய வீரர் முசாத் ஒபைத் அல்சுபேல் (49.35 செக்.) இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இதேவேளை மூன்று வீரர்கள் மாத்திரம் பங்குபற்றிய நான்காவது தகுதிகாண் போட்டியை 49.78 செக்கன்களில் நிறைவசெய்த இலங்கை வீரர் இரேஷ் மதுவன்த போகொட இரண்டாம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் பங்குப்றற தகுதிபெற்றார்.
அப் போட்டியில் சவூதி அரேபிய வீரர் மேஷால் அப்துல் ஹஸாஸி (49.73 செக்.) முதலாம் இடத்தையும் மலேசிய வீரர் முஸ்தபா கமால் (50.72 செக்.) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
அரை இறுதிப் போட்டிகள் இன்று இரவு 8.25 மணியளவில் நடைபெறவுள்ளது.
அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ள 16 வீரர்களில் இரேஷ் மதுவன்த போகொட ஒட்டுமொத்த நிலையில் 11ஆவது இடத்திலும் ஷானுக்க நெத்மல் கொஸ்தா 12ஆவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதாக இருந்தால் அதி சிறந்த ஆறறல்களை வெளிப்படுத்தி முதல் நான்கு இடங்களுக்குள் வரவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM