ரஸ்யா தெரிவிப்பதை விட ரஸ்ய படையினர் பலவீனமான நிலையில் உள்ளனர் –உக்ரைன் படையினரால் கைதுசெய்யப்பட்ட சீன பிரஜைகள்

Published By: Rajeeban

15 Apr, 2025 | 04:29 PM
image

உக்ரைன் படையினரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு சீனா பிரஜைகள் ரஸ்யா தெரிவித்துவருவதற்கு மாறாக அந்த நாட்டின் இராணுவம் பலமான நிலையில் இல்லை  என தெரிவித்துள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில் கிழக்கு உக்ரைனில் ரஸ்யாவிற்காக போரிட்டுக்கொண்டிருந்த வாங் குவான்ஜங் மற்றும் ஜாங் ரென்போ ஆகியோர் பிடிபட்டனர்இருவரும் உக்ரைன் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இராணுவசீருடையுடன் கைககள் கட்டப்பட்ட நிலையில்இவர்களை உக்ரைனின் தேசிய செய்தி முகவர் அமைப்பான உக்ரின்போர்ம் ஏற்பாடு செய்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தனர்.

ரஸ்யர்கள் தெரிவிப்பது அனைத்தும் பொய்,அவர்கள் போலியானவர்கள் ரஸ்யா தெரிவிப்பது போல உண்மையில் அது வலுவான நிலையில் இல்லை,அவர்கள் சொல்வது போல உக்ரைன் மோசமான நிலையில் இல்லை எனசீனா பிரஜைகள் தெரிவித்தனர்.

நாங்கள் சீனா  சார்பாக போரிடவில்லைசீன அரசாங்கத்திற்கும் எங்களிற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இணையவிளம்பரங்கள் மூலம் எங்களை கூலிப்படையாக சேர்த்துக்கொண்டனர் என அவர்கள் தெரிவித்தனர்.

நான் டிக்டொக் விளம்பரம் ஊடாக தெரிவு செய்ப்பட்டேன் என தெரிவித்த வாங்,நான் அதன் பின்னர் நாங்கள் வாகனங்கள் மூலம்தென்மேற்கு ரஸ்யாவின் கசானிற்கு சென்றோம்,அதன் பின்னர் கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்திற்கு சென்றோம்,அங்கு ஜாங் உடன் என்னை இராணுவத்தில் இணைத்தார்கள் என தெரிவித்துள்ளார்.

நான் ரஸ்யாவில் சுற்றுலாப்பயணியாகயிருந்தவேளை விளம்பரமொன்றை பார்த்தேன்,இரண்டு மில்லியன் ஊதியம் என தெரிவித்தார்கள் நான் ரஸ்ய இராணுவத்தில் இணையதீர்மானித்தேன் எனதெரிவித்தார்.

இருவரும் டொனெட்ஸ்கில் கைதுசெய்யப்பட்டனர், இவர்களின் படங்கள்8ம் திகதி வெளியாகின.

முன்னரங்கிற்கு வந்த உடனேயே கைதுசெய்யப்பட்டோம் நாங்கள் உக்ரைன் படைவீரர்கள் எவரையும் கைதுசெய்யவில்லை எனஇருவரும் தெரிவித்தனர்.

ரஸ்ய முகாம்களில் காணப்படும் நிலை குறித்த கேள்விக்கு மின்சாரமும் குடிநீரும் இல்லை என இருவரும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து ;...

2025-04-29 16:18:09
news-image

இந்திய இராணுவம் விரைவில் ஊடுருவும் ;...

2025-04-29 15:47:50
news-image

19 ஆண்டுகளாக ஆந்திராவில் வசிக்கும் பாகிஸ்தான்...

2025-04-29 13:38:09
news-image

"டிரம்ப் எங்களை சிதைக்க முயல்கின்றார் அமெரிக்காவுடனான...

2025-04-29 12:34:23
news-image

கனடா தேர்தல் - வெற்றிபெற்றது லிபரல்...

2025-04-29 10:55:31
news-image

கனடா தேர்தல் முடிவுகள்- லிபரல் கட்சிக்கு...

2025-04-29 08:20:12
news-image

ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸில் நீண்ட நேர...

2025-04-28 20:53:42
news-image

மேமாதம் எட்டாம் திகதி முதல் பத்தாம்...

2025-04-28 17:17:58
news-image

பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ எனக் குறிப்பிடுவதா? -...

2025-04-28 16:50:33
news-image

யேமன் சிறைச்சாலை மீது அமெரிக்கா வான்வெளி...

2025-04-28 14:45:08
news-image

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ.,...

2025-04-28 14:13:17
news-image

டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே கணித்த பயணியின்...

2025-04-28 12:54:42