மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது
தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்களான 3 பேர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று விளையாட்டு போட்டிகள் மற்றும் அன்னையின் திருவுருவப் படத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அமைதியாகச் செய்ய வேண்டிய இந்த நினைவேந்தலை இந்த மூவரும் அரசியலாக்கி இலாபமடையவுள்ளனர்.
இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த 3 பேரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி இவர்களைத் தடைசெய்து அமைதியாக நினைவேந்தலைச் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM