(இராஜதுரை ஹஷான்)
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்றவர்கள், கொழும்பு உட்பட தமது சேவை இடங்களுக்கு திரும்புவதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வழமையான அட்டவணைக்கு மேலதிகமாக இன்று முதல் 20 புகையிரதங்கள் மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் கொழும்பு உட்பட தமது சேவை நிலையங்களுக்கு திரும்புவதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய செவ்வாய்க்கிழமை (15) மாத்திரம் நாடளாவிய ரீதியில் 3,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதேபோல் செவ்வாய்க்கிழமை 5,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இன்றைய தினம் 75 சதவீதமளவான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் குறிப்பிட்டுள்ளது.
காங்கேசன்துறை, காலி, பதுளை மற்றும் பெலியத்தை ஆகிய பகுதிகளுக்கு வழமைக்கு மாறாக 20 புகையிரதங்கள் மேலதிக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM