இந்­தி­யாவை தள­மாகக் கொண்டு செயற்­படும் இந்து மஹா சபா மற்றும் ராஷ்­டி­ரிய சுயம்­சேவக் சங்கம் என்­ற­ழைக்­கப்­படும் ஆர். எஸ். எஸ் .ஆகிய இந்து தேசி­ய­வாத அமைப்­பு­க­ளுடன் பொது­ப­ல­சேனா இணைந்து செயற்­ப­டு­வ­தாக அந்த அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே தெரி­வித்தார். 

இதே­வேளை  ஞான­சார தேர­ருக்கு எதி­ரான கைதினை தடுப்­ப­தற்கு இந்து மஹா­சபா மற்றும் ஆர் .எஸ் .எஸ். ஆகிய அமைப்­புகள் ஊடாக பொது­பல சேனா இந்­தி­யா­விடம் உத­விகள் கோரி­யமை உள்­ளிட்ட தொடர்­புகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்தர்  ஒருவர் தெரி­வித்தார். பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டுகள் தொடர்பில் மீண்டும் பல்­வேறு சர்ச்­சைகள் எழுந்­துள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் இஸ்லாம் அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான தீவிர போக்கில் செயற்­பட்டு வந்த பொது­பல சேனா அமைப்பு நல்­லாட்­சியின் ஆரம்ப காலப்­ப­கு­தியில் மௌனித்­தி­ருந்­தாலும் தற்­போது மீண்டும் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக நீதி­மன்றில் பல்­வேறு வழக்­குகள் தொட­ரப்­பட்டு அவை தற்­போது தீர்­வு­க­ளையும் எட்­டி­யுள்­ளன.  கடந்த ஆட்­சி­யிலும் தற்­போ­தைய நல்­லாட்­சி­யிலும் பொது­பல சேனா வலு­வாக செயற்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் உண்­மை­யா­கவே பொது­ப­ல­சே­னாவின் பின்­னணி என்ன? என்ற கேள்­விகள் பல தரப்­பினர் மத்­தி­யிலும் காணப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் பொது­ப­ல­சேனா அமைப்பு இந்­தி­யா­வு­ட­னான தனது நெருக்­கத்தை மேலும் வலுப்­ப­டுத்தி செயற்­பட ஆரம்­பித்­துள்­ளது. இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி  ஆர் .எஸ். எஸ். அமைப்பின் முக்­கிய செயற்­பாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ராவார். அதே போன்று இந்து மஹா­சபா மற்றும் ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்­பு­க­ளுடன் பொது­ப­ல­சேனா உத­வி­களை கோரி­யுள்­ள­துடன் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வ­தற்­கான விருப்­பத்­தையும் அறி­வித்­துள்­ளது. 

இதன் விளை­வாக டில்­லியை தள­மாக கொண்டு இயங்கும் இந்து மஹா­சபா தலைவர் கலா­நிதி சந்தோஷ் ராய்  இந்­திய அர­சிற்கு அவ­சர கடிதம் ஒன்றை அனுப்பி பொது­பல சேனா­வையும் ஞான­சார தேர­ரையும் பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­ய­தாக  கூறப்­ப­டு­கின்­றது.