ஐ.சி.சி. மாதத்தின் அதிசிறந்த வீரர் இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர் : அதிசிறந்த  வீராங்கனை ஆஸி.யின் ஜோர்ஜியா வொல்

15 Apr, 2025 | 03:42 PM
image

(நெவில் அன்தனி)

மார்ச் மாதத்திற்கான ஐசிசியின் அதிசிறந்த வீரராக இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயரும், அதிசிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் ஜோர்ஜியா வொல்லும் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் (துபாய்) நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் கடைசிக் கட்டத்தில் இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியதற்காக  ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதிசிறந்த வீரருக்கான விருதை முதல் தடவையாக வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று வருடங்களின் பின்னர் இப்போது இரண்டாவது தடவையாக இந்த விருதை வென்றுள்ளார்.

2025 மார்ச் மாதம் நடைபெற்ற கடைசி மூன்று ஐசிசி சம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு அரைச் சதம் உட்பட் 3 போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட ஓட்டங்களை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.

நியூஸிலாந்துக்கு எதிராக கடைசி ஏ குழு போட்டியில் 79 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியாவுக்கு எதரான அரை இறுதிப் போட்டியில் 45 ஓட்டங்களையும் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 48 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் பெற்று இந்தியா சம்பியனாவதில் பெரும் பங்காற்றி இருந்தார்.

இந்த மூன்று போட்டிகளில் மொத்தமாக 172 ஓட்டங்களைப் பெற்ற அவரது சராசரி 57.33ஆக இருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலிய வீராங்கனை ஜோர்ஜியா வொல் முதல் தடவையாக ஐசிசி மாதத்தின் அதிசிறந்த வீராங்கனை விருதை வென்றெடுத்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களில் இந்த விருதை வென்ற நான்காவது அவுஸ்திரேலிய வீராங்கனை ஜோர்ஜியா வொல் ஆவார்.

அதற்கு முன்னர் அனாபெல் சதர்லண்ட் (2024 டிசம்பர்), பெத் மூனி (2025 ஜனவரி), அலனா கிங் (2025 பெப்ரவரி) ஆகிய அவுஸ்திரேலிய வீராங்கனைகள் இந்த விருதை தொடர்ச்சியாக வென்றிருந்தனர்.

கடந்த வருடம் டிசம்பார் மாதம் அவுஸ்திரேலிய அணியில் அறிமுகமான ஜோர்ஜியா வொல், கடந்த மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்தி இருந்தார்.

நியூஸிலாந்தில் நடைபெற்ற அந்தத் தொடரில் அவுஸ்திரேலியா 3 - 0 என முழுமையாக வெற்றிபெற்றது.

அந்த வெற்றியில் ஜோர்ஜியா வொல் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தார்.

மூன்று போட்டிகளிலும் முறையே 50 ஓட்டங்களையும் 36 ஓட்டங்களையும் 75 ஓட்டங்களையும் பெற்று மொத்தம் 161 ஓட்டங்களை குவித்த ஜோர்ஜியா வொல்லின் சராசரி 53.66 ஆக இருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடைசியில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை...

2025-04-30 01:36:34
news-image

ப்ரதிக்கா சாதனை நிலைநாட்டிய மகளிர் மும்முனை...

2025-04-29 19:12:49
news-image

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், ஜெவ்னா கிங்ஸின் தொழில்முறை...

2025-04-29 17:16:24
news-image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு...

2025-04-29 11:27:01
news-image

சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ரி20இல் மிக...

2025-04-29 01:47:32
news-image

14 வயது சிறுவன் ஐபிஎலில் குறைந்த...

2025-04-29 00:48:06
news-image

இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இரண்டாவது...

2025-04-28 20:55:30
news-image

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை வீழ்த்தியது...

2025-04-28 01:51:26
news-image

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது மும்பை...

2025-04-27 20:55:35
news-image

மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்...

2025-04-27 18:43:08
news-image

முதலாவது இளையோர் ஒருநாள் போட்டியில் ஆகாஷ்...

2025-04-26 21:51:08
news-image

கடைநிலை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னையை...

2025-04-26 01:12:59