நைஜீரியாவில் பாஸ்சா பகுதியில் விவசாய சமூகத்தினரை குறிவைத்து துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதில் 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இரு குழுக்கள் இடையே நீண்ட காலமாக மோதல் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று குறித்த துப்பாகிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது.
விவசாய சமூகத்தினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர்கள் மேய்ப்பர்கள் என நம்பப்படும் சமூகத்தை சேர்ந்த ஆயுதமேந்தியவர்கள் என்று கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி இவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு தெரிவிக்கையில்,
இந்த நெருக்கடியை முழுமையாக விசாரித்து, வன்முறைச் செயல்களைத் திட்டமிட்டதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM