சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 பந்துகள் முறைமையில் மாற்றம் கொண்டு வர ஐசிசி பரிசீலனை; டெஸ்ட் கிரிக்கெட்டில் 60 செக். நடைமுறையும் பரிசீலனை

15 Apr, 2025 | 02:31 PM
image

(நெவில் அன்தனி) 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலனை செய்துவருகிறது.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 60 செக்கன் நிறுத்தக் கடிகாரத்தை செயல்படுத்துவது குறித்து கிரிக்கெட் சபைகள் பரிசீலனை செய்து கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளன.

துடுப்புக்கும் பந்துக்கும் (bat and ball) இடையில் சமநிலையைப் பேணும் முயற்சியாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலித்து வருகிறது.

ஹராரேயில் இந்த வாரம் நடைபெற்ற ஐசிசி கூட்டங்களின்போது 35ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்தை மாத்திரம் பயன்படுத்தவேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்டது.

பிரதம நிறைவேற்று அதிகாரிகளிடம் சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆடவர் கிரிக்கெட் குழுவினர் இந்த சிபாரிசை முன்வைத்தனர்.

தற்போது நடைமுறையில் உள்ளவாறு ஒவ்வொரு இன்னிங்ஸும் இரண்டு பந்துகளுடன் ஆரம்பமாகும்.   ஆனால், புதிய சிபாரிசின் பிரகாரம், 34ஆவது ஓவருக்குப் பின்னர், இரண்டு பந்துகளும் 17 ஓவர்கள் பழையதாக இருக்கும்போது, களத்தடுப்பில் ஈடுபட்டுள்ள அணி எந்த பந்தை வீச விரும்புகிறது என்பதைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படும். தேர்வு செய்யப்படாத பந்து, தேவைப்பட்டால் பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்படும்.

முன்னதாக 25 ஓவர்களுக்குப் பின்னர் பந்தை மாற்றுவதற்கான பரிந்துரையை கிரிக்கெட் குழு முன்வைத்திருந்தது. ஆனால், குழு உறுப்பினர்கள் மத்தியில் இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து ஒவ்வொரு பந்தும் 17 ஓவர்களைப் பூர்த்திசெய்த பின்னர் எந்தப் பந்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது என்பதே பொருத்தமானது என குழு கருதியது.

இந்த மாற்றம் குறித்து இந்த மாத இறுதிக்குள் கிரிக்கெட் சபைகள் தங்களது கருத்துக்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயத்தில் சபைகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படும் பட்சத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஐசிசியின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இந்த சிபாரிசு சம்பிரதாயபூர்வமாக முறைப்படுத்தப்படும். இது விளையாட்டுடன் தொடர்புடைய மாற்றம் என்பதால் ஐசிசியின் ஒப்புதல் தேவையில்லை எனக் கூறப்படுகிறது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு பந்துகள் என்ற விதிமுறை ஐசிசியனால் 2011இல் அமுல்படுத்தப்பட்டது. 1992 உலகக் கிண்ண கிரிக்கெட்டிலிருந்து 2011வரை ஒரு இன்னிங்ஸில் பயன்படுத்தப்படும் பந்தை 34ஆவது ஓவருக்கு பின்னர் கட்டாயம் மாற்ற வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்து வந்தது.

வெள்ளைப் பந்துகளின் நிறம் மங்கிவிடுவதால் எளிதாகப் பார்க்கக்கூடிய பந்து 35ஆவது ஓவரிலிருந்து பயன்படுத்தப்பட்டது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 60 செக்.

நிறுத்தக் கடிகாரம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் 60 செக்கன்கள் நிறுத்தக் கடிகாரத்தை செயல்படுத்துவது குறித்து கிரிக்கெட் சபைகள் பரிசீலித்து தமது கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளன. மந்தகதி ஓவர் வீதத்தைக் கட்டுப்படுத்தும் இந்த விதிமுறை கடந்த வருடத்திலிருந்து ரி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்படுகிறது. குறிப்பிடப்பட்ட மற்றும் சலுகை நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசத் தவறும் அணிகளுக்கு 30 யார் வட்டத்திற்குள் ஒரு கூடுதல் வீரரைக் கொண்டுவருவது உட்பட அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடைசியில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை...

2025-04-30 01:36:34
news-image

ப்ரதிக்கா சாதனை நிலைநாட்டிய மகளிர் மும்முனை...

2025-04-29 19:12:49
news-image

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், ஜெவ்னா கிங்ஸின் தொழில்முறை...

2025-04-29 17:16:24
news-image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு...

2025-04-29 11:27:01
news-image

சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ரி20இல் மிக...

2025-04-29 01:47:32
news-image

14 வயது சிறுவன் ஐபிஎலில் குறைந்த...

2025-04-29 00:48:06
news-image

இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இரண்டாவது...

2025-04-28 20:55:30
news-image

பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் டெல்ஹியை வீழ்த்தியது...

2025-04-28 01:51:26
news-image

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெளுத்துக்கட்டியது மும்பை...

2025-04-27 20:55:35
news-image

மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்...

2025-04-27 18:43:08
news-image

முதலாவது இளையோர் ஒருநாள் போட்டியில் ஆகாஷ்...

2025-04-26 21:51:08
news-image

கடைநிலை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னையை...

2025-04-26 01:12:59