சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடைக்காது.
கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் சீர்குலைந்து வருகிறது.
யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது.
பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்ததுடன் மாற்றங்களை செய்ய வலியுறுத்தியதையும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM