மிஹிந்தலையில் கெப் வாகனம் விபத்து ; இருவர் உயிரிழப்பு!

15 Apr, 2025 | 12:27 PM
image

அநுராதபுரம் - மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லமொராண பிரதேசத்தில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர்  உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை  பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கெப் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ள நிலையில் அதில் பயணித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 மற்றும் 37 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51