(நெவில் அன்தனி)
சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமாகும் 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இலங்கையைச் சேர்ந்த 19 மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இந்த சம்பியன்ஷிப் ஏப்ரல் 18ஆம் திகதி வரை 3 தினங்கள் நடைபெறும்.
இப் போட்டியில் இலங்கை சார்பாக 12 வீரர்களும் 7 வீராங்கனைகளும் பங்கபற்றவுள்ளனர்.
ஆண்கள் அணித் தலைவராக தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நாத்தாண்டி, தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் அணித் தலைவியாக தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் சுவீகரித்த கம்பளை விக்ரமபாகு மத்திய கல்லூரி வீராங்கனை தருஷி அபிஷேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் குறைந்தது 10 பதக்கங்கள் இலங்கைக்கு கிடைக்கும் என ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம்) தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியினர் சவூதி அரேபியாவை சென்றடைந்துள்ளனர்.
அணி விபரம்
ஆண்கள்
இமேஷ் சில்வா (மருதானை புனித சூசையப்பர் கல்லூரி) - 100 மீற்றர், 200 மீற்றர், கலவை தொடர் ஓட்டம்
சந்தருவன் சில்வா (மினுவாங்கொடை நாலந்த ஆண்கள் கல்லூரி) - 100 மீற்றர், கலவை தொடர் ஓட்டம்
ஷானுக்க கொஸ்தா (கொழும்பு கேட்வே கல்லூரி) - 400 மீற்றர், கலவை தொடர் ஓட்டம்
மதுவன்த போகொட (குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவலை கல்லூரி) - 400 மீற்றர்.
ஷவிந்து அவிஷ்க (நாத்தாண்டி தம்மிஸ்ஸர தேசிய பாடசாலை) - 800 மீற்றர்
ரெஹான் பெரேரா (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை) - 800 மீற்றர்
லஹிரு அச்சின்த (இரத்தினபுரி புனித அலோஷியஸ் கல்லூரி) - 1500 மீற்றர், 3000 மீற்றர்
ஷவிந்து நிமேஷ டயஸ் (அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்த கல்லூரி) - 400 மீற்றர் சட்டவேலி ஓட்டம்
நெத்ய சம்ப்பத் (திம்பிரிகஸ்கடுவ மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி) - உயரம் பாய்தல்
தினுக்க டில்ஷான் (எம்பிலிப்பிட்டி முலெந்தியவல மகா வித்தியாலயம்) - உயரம் பாய்தல்
ஹன்சன ஜயசிங்க (கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி) - முப்பாய்ச்சல்
ஜே.எல். ஜென்கின்ஸ் (கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி) - முப்பாய்ச்சல்
பெண்கள்
தனஞ்சனா பெர்னாண்டோ (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை) - 100 மீற்றர், 200 மீற்றர்
தருஷி அபிஷேக்கா (கம்பளை விக்ரமபாகு மத்திய கல்லூரி) - 800 மீற்றர்
நிதுக்கி ப்ரார்த்தனா (முந்தல், பரனாங்கட்டுவை கனிஷ்ட வித்தியாலயம்) - 1500 மீற்றர்.
அயேஷா செவ்வந்தி (சூரியவெவ, நமடகஸ்வெவ மகா வித்தியாலயம்) - 1500 மீற்றர்
சன்சலா ஹிமாஷனி (கினிகத்தேனை, அம்பகமுவ மத்திய கல்லூரி) - 400 மீற்றர் சட்டவேலி ஓட்டம்
சச்சினி மதுஹன்சிகா (சூரியவெவ, நமடகஸ்வெவ மகா வித்தியாலயம்) - 2000 மீற்றர் தடைதாண்டி ஓட்டம்
டில்கி நெஹாரா (பாணந்துறை ஸ்ரீ சுமங்கல பெண்கள் வித்தியாலயம்) - முப்பாய்ச்சல்
பயிற்றுநர்கள்: அநுராத நாணயக்கார, இந்திக்க எட்டிபொல, புத்திக்க நுவன்.
வீராங்கனைகளுக்கான பொறுப்பாளர்: லக்னா வராவிட்ட.
அணி முகாமையாளர்: என்.ஏ.ரி. ஜயசிங்க.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM