(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏ அணிகளுக்கு இடையிலான மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் அயர்லாந்து ஏ அணியை 48 ஓட்டங்களால் இலங்கை ஏ அணி வெற்றியீட்டியது.
சஹான் ஆராச்சிகேயின் அபார துடுப்பாட்டம், தரிந்து ரத்நாயக்கவின் சிறப்பான சகலதுறை ஆட்டம் என்பன இலங்கை ஏ அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை ஏ அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சஹான் ஆராச்சிகே 5 பவுண்டறிகளுடன் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
அவரை விட தரிந்து ரத்நாயக்க 35 ஓட்டங்களையும் லஹிரு உதார 32 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு 18 வைட்கள் உட்பட 30 உதிரிகள் கிடைத்தன.
அயர்லாந்து ஏ அணி பந்துவீச்சில் தொமஸ் மேயெஸ் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் மெக்கார்த்தி 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து ஏ அணி 44.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சாம் டொப்பிங் 39 ஓட்டங்களையும் ஜோர்டன் நீல் ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும் கேட் கார்மைக்கல் 37 ஓட்டங்களையும் ரொஸ் அடயார் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சஹான் ஆராச்சிகே
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM