(நெவில் அன்தனி)
டெல்ஹி அருண் ஜய்ட்லி விளையாடரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற மும்பை இண்டியன்ஸுக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலால 18ஆவது அத்தியாயத்தின் 29ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 12 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
தனது முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ், இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் தடவையாக தோல்வியைத் தழுவியது.
திலக் வர்மா, ரெயான் ரிக்ல்டன், சூரியகுமார் யாதவ், நாமன் திர் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், கர்ண் ஷர்மாவின் துல்லியமான பந்துவீச்சு, கடைசிக் கட்டத்தில் சிறப்பான களத்தடுப்பு என்பன மும்பை இண்டியன்ஸை வெற்றிபெறச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 6ஆவது விக்கெட்டில் திலக் வர்மா, நாமன் திர் ஆகிய இருவரும் பகிர்ந்த 62 பெறுமதிமிக்க ஓட்டங்களின் உதவியுடன் மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைக் குவித்தது.
ரோஹித் ஷர்மா (18), ரெயான் ரிக்ல்டன் ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 30 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
திறயைமாகத் துடுப்பெடுத்தாடிய ரெயான் ரிக்ல்டன் 25 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களைக் குவித்தார்.
தொடர்ந்து சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார்.
திலக் வர்மா 5ஆவது விக்கெட்டில் மேலும் 62 ஓட்டங்களை நாமன் திர்ருடன் பகிர்ந்து அணிக்கு வலு சேர்த்தார்.
திலக் வர்மா 33 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.
நாமன் திர் 17 பந்துகளில் 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விப்ராஜ் நிகம் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
206 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல் 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்ற தோல்வி அடைந்தது.
ஆரம்ப வீரர் ஜேம்ஸ் ப்ரேஸர் மெக்கேர்க் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (0 - 1 விக்,)
இது டெல்ஹி அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.
ஆனால், அபிஷேக் பொரெல், கருண் நாயர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 119 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
கருண் நாயர் 40 பந்துகளில் 12 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களை விளாசி ஆட்டம் இழந்தார். (135 - 3 விக்.)
அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் ஆட்டம் கண்டது.
டெல்ஹி கெப்பிட்டல்ஸின் கடைசி 8 விக்கெட்கள் 63 ஓட்டங்களுக்கு சரிந்தன. இதில் கடைசி 3 விக்கெட்கள் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வீழ்ந்தன. இந்தக் கடைசி 3 விக்கெட்களும் ரன் அவுட் முறையில் வீழந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பொரெல், நாயர் ஆகியோரைவிட கே. எல். ராகுல் (15), அஷுட்டோஷ் ஷர்மா (17), விப்ராஜ் நிகம் (14) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் கரண் ஷர்மா 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: கரண் ஷர்மா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM