சோல்ட், கோஹ்லி அபார அரைச் சதங்கள்; ராஜஸ்தான் றோயல்ஸை வீழ்த்தியது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு

13 Apr, 2025 | 10:34 PM
image

(நெவில் அன்தனி)

ஜய்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 28ஆவது போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை எதிர்த்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

அப் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் சார்பாக யஷஸ்வி ஜய்ஸ்வால் அரைச் சதம் குவித்தபோதிலும் பில் சோல்ட், விராத் கோஹ்லி ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிபெறுவதற்கு வழிவகுத்தன.

ராஜஸ்தான் றோயல்ஸினால நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 17.3 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பில் சோல்ட், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 52 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டத்தில் பில் சோல்டின் பங்களிப்பு 65 ஓட்டங்களாகும். 33 பந்துகளை எதிர்கொண்ட பில் சோல்ட் 5 பவுண்டறிகளையும் 6 சிக்ஸ்களையும் விளாசினார்.

அதனைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் தேவ்டத் படிக்கல்லும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

விராத் கோஹ்லி 45 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களுடனும் தேவ்டத் படிக்கல் 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 40 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் 47 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் அதிரடியாக 75 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரை விட ரெயான் பரக் 30 ஓட்டங்களையும் த்ருவ் ஜுரெல் ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்டநாயகன்: பில் சோல்ட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35