அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பை உடனடியாக நிறுத்திக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவேளை, நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக இடம்பெற்று வந்த நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.