கறுப்பு நிற உணவுகளில் உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள்

13 Apr, 2025 | 12:52 PM
image

பொதுவாக நாம் உண்ணும் உணவுகள் நிறங்களின் அடிப்படையிலும் நமக்கு உடல் நலத்தை பெற்றுத்தருகின்றது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

அந்த வகையில் கறுப்பு நிற உணவுகளை நாம் பெரிதாக கண்டுகொள்ள மாட்டோம். உண்மையில் கறுப்பு நிற உணவுகளில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளன. 

கறுப்பு பீன்ஸ் - இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கறுப்பு பீன்ஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கிறது. மேலும் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. 

கறுப்பு பூண்டு - அதிகமான ஆன்டிஆக்சிடென்ட்களை கொண்டுள்ள இந்த பூண்டு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 

கறுப்பு பேரீச்சம்பழம் - மலச்சிக்கல் பிரச்சினையை நீக்குகிறது. 

கறுப்பு எள் - இதில் கல்சியம், இரும்புச்சத்து போன்றன அதிகம் காணப்படுவதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் நல்லது. 

கறுப்பு உளுந்து - புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் கொண்டுள்ள கருப்பு உளுந்து செரிமானத்தை சீராக்குவதுடன் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. 

கறுப்பு அரிசி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலிலுள்ள செல்களின் சேதத்தை தடுக்கிறது. 

கறுப்பு திராட்சை - இதய ஆரோக்கியத்துக்கு நல்லது, நினைவாற்றலை அதிகரிக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடைந்த எலும்பைக் கூட ஒட்ட வைக்கும்...

2025-04-29 16:30:29
news-image

எபிடிடிமிடிஸ் எனும் விதைப்பை வீக்க பாதிப்பிற்குரிய...

2025-04-29 14:21:57
news-image

அட்ரீனல் பியோக்ரோமோசைட்டோமா எனும் சிறுநீரக கட்டி...

2025-04-28 17:33:58
news-image

பெர்டிடோலொட்டி சிண்ட்ரோம் எனும் கீழ் முதுகெலும்பு...

2025-04-26 15:40:08
news-image

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் கல்லீரல் நலன்..!

2025-04-26 13:31:35
news-image

ஃபுட் டிராப் ( Foot Drop)...

2025-04-25 11:06:16
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-04-23 16:05:42
news-image

இன்ஃபிளமெட்ரி மயோஃபைப்ரோபிளாஸ்ரிக் கட்டி பாதிப்பிற்குரிய நவீன...

2025-04-22 16:37:00
news-image

யாரெல்லாம் கத்தரிக்காய் உண்பதை தவிரக்க வேண்டும்?

2025-04-22 15:32:32
news-image

ஹெமாஞ்சியோமா பாதிப்பிற்குரிய நவீன லேசர் சிகிச்சை

2025-04-21 14:22:41
news-image

தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்துங்கள்…!

2025-04-21 13:10:31
news-image

மண்ணீரல் நரம்பு மறு சீரமைப்பு சிகிச்சை

2025-04-19 17:32:59