அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவாகமகலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் அனுப்பி வைத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் . சமயநெறியானது, ஒவ்வொரு சமயத்தினரையும் வழிப்படுத்துவதாக, நெறிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழ் வருடங்கள் 60இல் 39ஆவது வருடமாக இவ் வருடம் விசுவாவசு எனும் நல்நாமத்துடன் பிறக்கின்றது. வருட ஆரம்பநாளில் அனைவரும் அமைதியான முறையில் இறை பிரார்த்தனையுடன், பெரியோர் முன்னோர் வணக்கத்துடன் தினசரி விடயங்களை ஆரம்பித்து தொடர்வது வழமை.
சமயங்கள் வாழ்வியலை போதித்து நிற்கிறது. நாம் ஒவ்வொருவரும் சமயநெறி காட்டிய ஒழுங்கில் வாழ முயற்சி செய்து அவ்வாறே வாழ வேண்டும்.
எமது சைவத்தமிழ் மக்கள் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பலமும் பெற்று இன்பகரமாக வாழ்க என அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்து மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM