அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர் என்று வட­கொ­ரியா கடு­மை­யாக சாடி­யுள்­ளது. 

அமெ­ரிக்­காவின் வெர்­ஜீ­னியா பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரான ஒட்டோ வார்ம்­பியர்  கடந்­தாண்டு வட­கொ­ரி­யா­வுக்கு பயணம் செய்­த­போது, அந்­நாட்டு அரசால் உளவு குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டார்.

அதன்பின், அரசின் பிர­சார சுவ­ரொட்­டியை திருட முயன்ற குற்­றச்­சாட்டில் 15 ஆண்­டுகள் கடுங்­காவல் தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டார். சிறையில் வாம்­பி­யரின் உடல்­நிலை மோச­மாகி கோமா நிலைக்கு சென்­றதால், கடந்த வாரம் விடு­விக்­கப்­பட்டார்.

அமெ­ரிக்­காவில் மருத்­துவ சிகிச்சை மேற்­கொண்டு வந்த வாம்­பியர் சில தினங்­க­ளுக்கு முன் இறந்தார். வாம்­பி­யரின் இறப்­புக்கு வட­கொ­ரிய அரசின் கொடூர சித்தி­ர­வ­தை­களே காரணம் என அவ­ரது குடும்­பத்­தினர் குற்­றஞ்­சாட்­டினர்.

இதை­தொ­டர்ந்து, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், வட­கொ­ரிய நாட்டில் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான ஆட்சி நடப்­ப­தாக குற்­றஞ்­சாட்டி வந்தார்.

இந்­நி­லையில், அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர் என்று வட­கொ­ரியா கடு­மை­யாக சாடி­யுள்­ளது. 

வட­கொ­ரி­யாவின் அரசு நாளி­த­ழான சின்மன் செய்­தித்­தாளில் எழு­தப்­பட்­டுள்ள தலை­யங்­கத்தில் கூறி­யுள்­ள­தா­வது:- “அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த நாட்டில் கடி­ன­மான சூழ்­நி­லையில் உள்ளார். உள்­நாட்டு அர­சியல் விமர்­ச­னங்­களை திருப்­பு­வ­தற்­காக வட­கொ­ரியா மீது முன்­னெச்­ச­ரிக்கை தாக்­குதல் நடத்தும் யோச­னையை அவர்  கையாள்­கிறார்.

மன­நிலை பாதிக்­கப்­பட்ட டிரம்பின் ஆலோ­ச­னை­களைப் பின்­பற்­றினால், அது பேர­ழி­விற்­குத்தான் கொண்­டு­செல்லும் என்­பதை தென்­கொ­ரியா உணர வேண்டும்” என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.