(நெவில் அன்தனி)
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐபிஎல் போட்டியில் அபிஷேக் ஷர்மா 55 பந்துகளில் குவித்த 141 ஓட்டங்களின் உதவியுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிகூடிய இரண்டாவது வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 8 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸை வெற்றிகொண்டது.
இதன் மூலம் தொடர்ச்சியாக கடந்த நான்கு போட்டிகளில் அடைந்த தொல்விகளுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முற்றுப்புள்ளி வைத்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் கடந்த வருட போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டிக் கடந்த 262 ஓட்டங்களே இதற்கு முன்னர் ஐபிஎல் இல் ஓர் அணியினால் கடக்கப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்த ஹைதராபாத் ஆடுகளத்தில் அபிஷேக் ஷர்மா, ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களை பந்தாடி வெறும் 74 பந்துகளில் 171 ஓட்டங்களைப் பகிர்ந்து 246 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலகுவாக கடக்க உதவினர்.
பஞ்சாப் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 246 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 247 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.
அபிஷேக் ஷர்மா 14 பவுண்டறிகள், 10 சிக்ஸ்களை விளாசினார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களைப் பெற்றார்.
ட்ரவிஸ் ஹெட்டுடன் 171 ஓட்டங்களைப் பகிர்ந்த அபிஷேக் வர்மா, 2ஆவது விக்கெட்டில் மேலும் 51 ஓட்டங்களை ஹென்றி க்ளாசனுடன் பகிர்ந்தார்.
ஹென்றி க்ளாசன் 21 ஓட்டங்களுடனும் இஷான் கிஷான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைக் குவித்தது.
ப்ரியான்ஸ் ஆரியா (36), ப்ரப்சிம்ரன் சிங் (42) ஆகிய இருவரும் 24 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து நெஹால் வதேரா (27), அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 82 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 11 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஹர்ஷா பட்டேல் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஐபிஎல் இல் அறிமுகமான இலங்கை வீரர் ஏஷான் மாலிங்க 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: அபிஷேக் ஷர்மா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM