ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை சென். பற்றிக்ஸ் கல்லூரி சுவீகரித்தது

13 Apr, 2025 | 12:02 AM
image

(என்.வீ.ஏ.)

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி 24ஆவது தடவையாக ராஜன் கதிர்காமம் கிண்ணத்தை சுவீகரித்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  153  ஓட்டங்களைப்   பெற்றது.

யாழ்ப்பாணக் கல்லூரி சார்பாக மத்திய வரிசையில் ரீ. டேமியன் (36), எஸ். கபிஷன் (32), அணித் தலைவர் எஸ். மதுசன் (25) ஆகிய மூவர் 25 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வேகப்பந்து வீச்சாளன் விஜயகுமார் இவொன் 24 ஓட்டங்ளுக்கு 4  விக்கெட்களையும் கே. லிக்ஷான் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

154 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் 43.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

சென். பற்றிக்ஸ் சார்பாக ஆரம்ப வீரர் எஸ். ஷியான்சன் 52 ஓட்டங்களையும் அணித் தலைவர் பற்குணம் மதுஷன் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்கனையும் பெற்றனர்.

இப் போட்டிக்கு சென் பற்றிக்ஸ் கல்லூரியில் 1999 ஆம் ஆண்டில் சாதாரண தரத்திலும் 2002 ஆம் ஆண்டில் உயர் தரத்திலும் கல்விகற்ற மாணவர்களால் முன்னெடுக்கப்படும் இளந்தளிர் உதவும் கரங்கள் அமைப்பு பிரதான அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

விசேட விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர்: எஸ். ஷியான்சன் (சென். பற்றிக்ஸ்)

சிறந்த பந்து வீச்சாளர்: விஜயகுமார் இவொன் (சென் பற்றிக்ஸ்)

சிறந்த களத்தடுப்பாளர்: ஏ. விஷ்ணுகோபன் (யாழ்ப்பாணக் கல்லூரி)

இறுதி ஆட்ட நாயகன்: எஸ். ஷியான்சன்  (சென் பற்றிக்ஸ்)

சிறந்த இணைப்பாட்டம் (4ஆது விக்கெட் - 49 ஓட்டஙகள்) எஸ். சியான்சன் - ஹரின் ஏட்றியன் (சென். பற்றிக்ஸ்)

அர்ப்பணிப்பான வீரர்கள்: எஸ். கபிஷன் (யாழ்ப்பாணக் கல்லூரி), ஏ. இவொன் (சென். பற்றிக்ஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடைநிலை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னையை...

2025-04-26 01:12:59
news-image

ஏ அணிகளுக்கு இடையிலான மும்முனை ஒருநாள்...

2025-04-25 23:48:50
news-image

டயலொக் பாடசாலைகள் றக்பி முதல்தடவையாக ஜனாதிபதி...

2025-04-25 15:54:06
news-image

2026இல் 15ஆவது SAFF சாம்பியன்ஷிப்

2025-04-25 14:27:23
news-image

கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில்...

2025-04-25 01:00:18
news-image

இலங்கை ஆரம்பவியலாளர் குத்துச்சண்டையில் வவுனியா பெண்கள்...

2025-04-24 18:14:16
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ வங்கிக்...

2025-04-24 14:32:37
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில்...

2025-04-24 05:16:31
news-image

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மீண்டும்...

2025-04-24 05:12:04
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முறைமையை ...

2025-04-23 21:08:04
news-image

லக்னோவை இலகுவாக வென்றது டெல்ஹி; ஐபிஎல்...

2025-04-23 00:17:02
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேசிய உயர் செயல்திறன்...

2025-04-22 22:04:03