தாய், இரு பிள்கைள் மீது மேற்கொண்ட கத்திக்குத்தில் பிள்ளை பலி ; தவறான உறவே காரணம் 

Published By: Priyatharshan

24 Jun, 2017 | 12:23 PM
image

கொட்டதெனியாவ பிரதேச்தில் தாயொருவர் மீதும் அவரது இரு பிள்ளைகள் மீது  நபரொருவர் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பிள்ளையெருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர் குறித்த பெண்ணுடன் தவறான தொடர்பு கொண்டிருந்தவர் என தெரியவந்துள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளும், தாயும், மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது பெண் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.

தற்போது தாக்குதலுக்குள்ளான தாயும் மற்றைய பிள்ளையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்தியால் குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும்  இவ்வாறு தாக்குதலுக்குள்ளான தாய் மற்றும் பிள்ளைகளும் ஹெலகம - கிதுல்வல பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த தாய்கும் சந்தேக நபருக்கும் இடையே காணப்பட்ட தவறான உறவே தாக்குதல் மற்றும் கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான சந்தேக நபர்  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29