கிரியாட்டீன் பவுடரை பாவித்தால் பக்கவிளைவு ஏற்படுமா?

12 Apr, 2025 | 05:37 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய உடல் உறுதிக்காக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். சில இளைஞர்கள் தங்களுடைய அழகான கட்டுடல் தோற்றத்திற்காக கிரியாட்டீன் பவுடரை பாவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சிலர் இதனை பாவித்தால் பக்க விளைவு ஏற்படுமா? என கேட்கிறார்கள். இது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

பொதுவாக எம்முடைய உடலில் உள்ள கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் கிரியாட்டின் சுரக்கும். இதன்பிறகு இவை என்னுடைய தசை பகுதிகளில் சேகரமாகி இருக்கும். இது நாம் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதும், பிற பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதும் இது அவசியமாகிறது. எம்முடைய உடலில் இத்தகைய கிரியாட்டின் இயற்கையாகவே சுரக்கும். சிலர் இதனை ஊட்டச்சத்து பொருளாக சாப்பிட தொடங்குவர். குறிப்பாக மெய் நிகர் விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள், உடற்பயிற்சி குறிப்பாக பளு தூக்கும் வீரர்கள் இந்த கிரியாட்டின் பவுடரை பாவிக்க தொடங்குகிறார்கள்.

இந்த கிரியாட்டின் பவுடரை யார் சாப்பிடலாம் என்பதற்கும் வைத்தியர்கள் சில வரைமுறையையும், நடைமுறையையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த கிரியாட்டின் பவுடரை சாப்பிடுவதற்கு முன்-  சாப்பிடுவதற்கு பின் என இரண்டு பரிசோதனைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னரான பரிசோதனையில் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவு - சிறுநீரகத்தின் இயங்கு திறன் ஆகியவற்றின் பரிசோதனைகள் இருக்கும். இந்த பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருந்தால் மட்டுமே கிரியாட்டின் பவுடரை சாப்பிடலாம்.

அதேபோல் ஒரு நாளைக்கு எத்தனை கிராம் இந்த பவுடரை சாப்பிடலாம் என்பதற்கும் ஒரு விதிமுறை உண்டு. இதனை வைத்தியர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரை மற்றும் அறிவுரையின் கீழ் குறைந்த காலகட்டத்திற்கு... குறைந்த அளவில் பாவிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 கிராமிலிருந்து 15 கிராம் வரை இந்த கிரியாட்டின் பவுடரை பாவிக்கலாம். இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முறை ரத்த சர்க்கரை அளவு குறித்த பரிசோதனை மற்றும் சிறுநீரகத்தின் செயல் திறன் குறித்த பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருந்தால்... இதனை தொடரலாம். இயல்பாக இல்லாமல் ஏதேனும் சிறிய அளவிலான மாற்றங்கள் இருந்தாலும் இந்த பவுடர் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.

அதே தருணத்தில் உங்களுக்கு நீரிழிவு நோய் சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் பாதிப்புகள் இருந்தால்... இத்தகைய பவுடரை சாப்பிடக்கூடாது. அதையும் மீறி பாவித்தால் ..சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் உண்டாகும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

- வைத்தியர் விக்னேஷ்

தொகுப்பு - அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடைந்த எலும்பைக் கூட ஒட்ட வைக்கும்...

2025-04-29 16:30:29
news-image

எபிடிடிமிடிஸ் எனும் விதைப்பை வீக்க பாதிப்பிற்குரிய...

2025-04-29 14:21:57
news-image

அட்ரீனல் பியோக்ரோமோசைட்டோமா எனும் சிறுநீரக கட்டி...

2025-04-28 17:33:58
news-image

பெர்டிடோலொட்டி சிண்ட்ரோம் எனும் கீழ் முதுகெலும்பு...

2025-04-26 15:40:08
news-image

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் கல்லீரல் நலன்..!

2025-04-26 13:31:35
news-image

ஃபுட் டிராப் ( Foot Drop)...

2025-04-25 11:06:16
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-04-23 16:05:42
news-image

இன்ஃபிளமெட்ரி மயோஃபைப்ரோபிளாஸ்ரிக் கட்டி பாதிப்பிற்குரிய நவீன...

2025-04-22 16:37:00
news-image

யாரெல்லாம் கத்தரிக்காய் உண்பதை தவிரக்க வேண்டும்?

2025-04-22 15:32:32
news-image

ஹெமாஞ்சியோமா பாதிப்பிற்குரிய நவீன லேசர் சிகிச்சை

2025-04-21 14:22:41
news-image

தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்துங்கள்…!

2025-04-21 13:10:31
news-image

மண்ணீரல் நரம்பு மறு சீரமைப்பு சிகிச்சை

2025-04-19 17:32:59