சுவையான பேரீச்சம்பழ பாயாசம்

12 Apr, 2025 | 04:23 PM
image

சுவையான பேரீச்சம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.......

தேவையான பொருட்கள் ;

  • 100 கிராம் பேரீச்சம் பழம்
  • 15 முந்திரி பருப்பு
  • 15 உலர் திராட்ச்சை
  • 1 கப் கெட்டியான பால்
  • 1/2 கப் தண்ணீர்
  • 3 ஏலக்காய்
  • 5 தேக்கரண்டி நெய்

செய்முறை ; 

1. பேரீச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. ஒரு கடாயில் 5 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு,உலர் திராட்ச்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

3. வேறொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.அதே நெய்யில் நறுக்கி வைத்த பேரீச்சம் பழத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

4. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும்.பேரீச்சம் பழம் நன்றாக வெந்தவுடன் பால் சேர்க்கவும்.

5. பால் சேர்த்த பின்பு,வறுத்து எடுத்த முந்திரி,உலர் திராட்ச்சை சேர்க்கவும்.அதனுடன் 3 ஏலக்காய் சேர்க்கவும்.

6. பால் கெட்டியாக வந்ததும் சிறிய பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி தூவி விடவும் வந்ததும்.பேரீச்சம்பழ பாயாசம்  தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right