இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிணில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர்.

 

புதுக்குடியிருப்பு கடற்பகுதியின் தென்கிழக்கு திசையில் 17 கடல் மைல்கள் தொலைவில் குறித்த 8 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

 இந்நிலையில் அவர்கள் மீன்பிடிக்காகப் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.