யாழ். வந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார் ; அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஸ்ரீகாந்தா 

12 Apr, 2025 | 03:14 PM
image

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல் சட்டம் அமுலில் இருக்கிறது. தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்குமாறு தேர்தல் திணைக்களம் சகல கட்சிகள் சுயேச்சை குழுக்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். 

அவர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் நடைபெற்ற போது, ஆலயத்தினுள் அதிரடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் புகுந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்புக்காக வந்தவர்கள், காலணிகளோடு ஆலய வளாகத்தில் புகுந்துள்ளார்கள். அது இந்து மக்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மாவிட்டபுரத்துக்கு சென்றது மிக மலிவான தேர்தல் பிரச்சாரத்துக்காகவே, மாவிட்டபுரத்துக்கு கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் வந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் பக்தர்களுக்கு இடையூறு  விளைவிக்கவில்லை. 

பிரதமரின் அதிரடி வருகையால் பக்தர்களின் வயிற்றெரிச்சலை தான் பெற்றுச் சென்றுள்ளனர். இந்த மலிவான அரசியலுக்கு நாம் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம்.

இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார், பிரதமர். தனது செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.  இதற்காக பிரதமர் என்ன சொல்லப்போகிறார் ? 

அதேபோன்று நேற்றைய தினம் காரைநகர் மற்றும் நீர்வேலி பகுதியில் ஆலய வளாகத்தில் மேடை அமைத்து, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பிரதமர் ஈடுபட்டிருந்தார். 

இவ்வாறான மலிவான அரசியலை நாட்டின் பிரதமர் செய்யக்கூடாது. இங்குள்ள எடுபிடி அரசியல்வாதிகள், சின்ன பிள்ளை அரசியல் செய்பவர்களின் சொல்லை கேட்டு நடக்கக்கூடாது. 

வடக்கை நோக்கி பல அரசியல்வாதிகள் உள்ளூராட்சி தேர்தலுக்காக படையெடுத்து வருகின்றனர். அவர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மத தலங்களில் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மலிவான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிட வேண்டும். 

தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது கடமைகளை சரியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37