ஐ.சி.சி. வரு­மானப் பகிர்வில் இலங்­கைக்கு 128 மில்­லியன் டொலர்கள் கிடைக்கவிருக்கின்­றது. அதேபோல் இந்­தி­யா­விற்கு 405 மில்­லியன் டொலர்கள் கிடைக்­க­வி­ருக்­கி­றது. இங்­கி­லாந்­துக்கு 139 மில்­லியன் டொலர்கள் கொடுக்க ஐ.சி.சி. சம்­மதம் தெரி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ளனம் நடத்தும் தொடர் மூலம் கோடிக்­க­ணக்கில் வரு­மானம் கிடைக்­கி­றது. இந்த வரு­மா­னங்கள் அனைத்து நாட்டு கிரிக்கெட் சபை­க­ளுக்கும் பிரித்து கொடுக்­கப்­படும்.

இதில் இந்­திய, இங்­கி­லாந்து மற்றும் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் சபை­க­ளுக்கு அதிக அளவில் வரு­மானப் பகிர்வு கிடைத்தி­ருந்­தது. 

தற்­போது லண்­டனில் நடை­ பெற்ற கூட்­டத்தில் இந்­தி­யா­வுக்கு 405 மில்­லியன் டொலர்கள் வழங்க முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இங்­கி­லாந்­துக்கு 139 மில்­லியன் டொலர்­களும், அவுஸ்­தி­ரே­லியா, பாகிஸ்தான், மேற்­கிந்­தியத் தீவுகள், நியூ­ஸி­லாந்து, இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் ஆகிய அணி­க­ளுக்கு தலா 128 மில்­லியன் டொலர்­களும், சிம்­பாப்வே அணிக்கு 94 மில்­லியன் டொலர்­களும் வழங்க ஐ.சி.சி. ஒப்புக் கொண்­டுள்­ளது.

மொத்தம் உள்ள 1536 மில் லியன் ரூபா வருமானப் பகிர்வில் இந்தியா 22.8 வீத சராசரி வருமானப் பகிர்வை பெறவிருக்கிறது.