ஜனா­தி­பதிக் கிண்ண மைலோ றக்பித் தொடரின் இறுதிப் போட்­டியில் கொழும்பு சென்.ஜோசப் கல்­லூரி அணியும் இசி­ப­தன கல்­லூரி அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

25ஆவது ஜனா­தி­பதிக் கிண்ண மைலோ றக்பித் தொடரில் ஏழு அணிகள் களம் கண்டிருந்­தன. நொக் அவுட் முறையில் நடை­பெற்ற இந்தப் போட்டித் தொடரில் இறுதிப் போட்­டிக்கு முதன்முறை­யாக கொழும்பு சென்.ஜோசப் கல்­லூரி அணி தகு­தி­பெற்­றது. மறு­மு­னையில் அதிக தட­வைகள் மைலோ றக்பி கிண்­ணத்தை வென்­றுள்ள இசி­ப­தன அணி இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றி­யது.

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் விறு­வி­றுப்­பான இறுதிப் போட்டி இன்று கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடல் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. 

பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான குறித்த போட்­டி­யா­னது இம்­முறை 25ஆவது வருடப் பூர்த்­தியைக் கொண்­டா­டு­கின்­றது.

இத்­த­ரு­ணத்தை மேலும் அலங்­க­ரிக்கும் வித­மாக கடந்த 25 வரு­டங்­களில் சம்­பி­ய­னான அணி­களின் தலை­வர்கள் மட்டும் மோதும் கண்­காட்சிப் போட்டி ஒன்றும் இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்­ளது.

மைலோ வைட் மற்றும் மைலோ கிரீன் என இரு அணி­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் அணித் தலை­வர்கள் இன்­றைய இறுதிப் போட்­டிக்கு முன்­பாக நடை­பெ­ற­வுள்ள போட்­டியில் மீண்டும் களம் காண­வுள்­ளனர்.

இவ்­வ­ரு­டத்­திற்கான மைலோ றக்பித் தொடரின் இறுதிப் போட்டி மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்­டிக்கு முதன்­மு­றை­யாக முன்­னே­றி­யுள்ள கொழும்பு சென்.ஜோசப் கல்­லூரி அணி வெற்­றி­வாகை சூடுமா அல்­லது 7முறை சம்பியன் பட்டம் வென்ற இசிபதன கல்லூரி அணி தனது சம்பியன் கணக்கை அதிகரித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.