வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அடுத்தமுறை தேர்தலிலும் நாம் ஆதரிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர். எல்.எப். அமைப்பின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரி வித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெற்றபோதே இவ்வாறான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவசக்தி ஆனந்தன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகா­ண­சபை விவ­காரம் ஒரு வழி­யாக முடி­விற்கு வந்­ததன் பின்னர், நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் நடை­பெற்­றது. இதில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வடக்கு மாகா­ண­சபை குழப்பம் தொடர்­பா­கவும் தான் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­கவும் நீண்­ட­தொரு விளக்­கத்தைக் கொடுத்­தி­ருந்தார். மாவை சேனா­தி­ரா­ஜா எம்.பி.யும் தனது விளக்­கத்தைத் தெரி­வித்­தி­ருந்தார்.

அவர்­க­ளது உரை முடி­வுற்­றதன் பின்னர் நான் எனது விளக்­கத்தைப் பின்­வ­ரு­மாறு முன்­வைத்தேன்.

மாகாண சபைத் தேர்தல் முடிந்­த­வுடன் பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­தி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் காரி­யா­ல­யத்தில் முத­ல­மைச்சர் மற்றும் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சிகள் கலந்­து­கொண்­டி­ருந்த கூட்­டத்தில் மாகா­ண­ச­பையை வழி­ந­டத்­து­வ­தற்கு ஒரு குழு அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்று நானும் எமது கட்­சியின் தலை­வரும் வலி­யு­றுத்­தினோம். பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்­களின் பின்னர் அதனை ஏற்­றுக்­கொண்டு குழுவும் அமைக்­கப்­பட்­டது.

ஆனால் அந்தக் குழு ஒரு­மு­றை­கூட கூட­வில்லை.

மாகா­ண­ச­பையின் முதல் ஒன்­றரை வரு­டங்கள் உங்­க­ளது வழி­காட்­ட­லின்­ப­டியே முத­ல­மைச்சர் செயற்­பட்டார். அப்­பொ­ழுது உங்­க­ளுக்கு முதல்வர் நல்­ல­வ­ராகத் தெரிந்தார். உங்­க­ளது பிழை­யான இரா­ஜ­தந்­திர அணு­கு­மு­றையும் கள யதார்த்­தமும் முதல்­வரை மக்கள் நலன்­சார்ந்து செயற்­படத் தூண்­டி­யி­ருந்­தது. இதனால் உங்­க­ளுக்கும் முதல்­வ­ருக்கும் இடையில் இடை­வெளி அதி­க­மா­கி­யது.

இந்­நி­லையில் தமி­ழ­ரசுக் கட்­சியால் அமைச்­சர்­கள்­மீது ஊழல் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. இந்த பிரச்­சினை கடந்த ஓராண்­டிற்கும் மேலாக நீடித்­தி­ருந்த நிலையில் கூட்­ட­மைப்பின் தலைவர் என்ற நிலையில் நீங்கள் இதனை சரி­யாக அணு­க­வில்லை. இந்த குற்­றச்­சாட்டை உரிய முறையில் அணுகி, அமைச்­சர்­களை மாற்­றி­யி­ருந்தால் மாகா­ண­ச­பையின் பிரச்­சினை இவ்­வ­ள­வு­தூரம் வந்­தி­ருக்­காது.

புளொட் அலு­வ­லக்த்தில் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்­டத்தில் நான்கு அமைச்­சர்­க­ளையும் மாற்றி சுழற்சி அடிப்­ப­டையில் ஏனைய நால்­வ­ருக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. மேலும் அண்­டனி ஜெகந்­நாதன் உட்­பட பதி­னாறு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.  அன்று அவ்­வாறு செய்­தி­ருந்தால் இந்தப் பிரச்­சினை எழுந்­தி­ருக்­காது.

கடந்த ஓராண்­டு­கா­ல­மா­கவே அமைச்­சர்கள் தொடர்­பாக ஊழல் மோச­டி­களும் குற்­றச்­சாட்­டு­களும் ஊட­கங்­களின் வாயி­லாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிப்­ப­தற்­காக முதல்வர் ஒரு விசா­ரணைக் குழுவை நிய­மித்தார். அந்த விசா­ரணைக் குழு நிய­மிக்­கும்­போது நீங்கள் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை. விசா­ரணை குழுவின் அறிக்கை வெளி­வந்த பின்­னரும் நீங்கள் தலை­யிட்டு அந்த அறிக்கை தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க முடியும். அத­னையும் நீங்கள் செய்­ய­வில்லை. இதனால் முத­ல­மைச்சர் சபையின் மாண்­பையும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பையும் தக்க வைக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்டார்.

அமைச்­சர்கள் அனை­வரும் தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவும் அதற்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளா­கவும் இருந்­ததால் அவர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையைக் கைவி­டு­வ­தற்கும் இதற்­காக முத­ல­மைச்­சரை நீக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்­தீர்கள். மக்கள் செல்­வாக்கும், ஈ.பி.ஆர்.எல்எவ், ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்­சி­களின் ஆத­ரவும் முத­ல­மைச்­ச­ருக்கு இருந்­த­தாலும் முத­ல­மைச்­சரின் பக்கம் நியாயம் இருந்­த­தாலும் வேறு­வ­ழி­யின்றி உங்கள் நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து நீங்கள் பின்­வாங்­கி­னீர்கள்.

பிரச்­சினை சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யதும் இரண்டாம் நாள் நான் உங்­க­ளிடம் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்­டத்தை யாழ்ப்­பா­ணத்தில் கூட்­டு­மாறு வேண்­டுகோள் விடுத்தேன். ஆனால் நீங்கள் அன்று நேரம் இல்­லை­யென்றும் அடுத்த இரண்டு தினங்கள் கழித்து கொழும்பில் சந்­திக்­கலாம் என்றும் கூறி கட்சித் தலை­வர்­க­ளுக்கு அறி­விக்­கு­மாறு என்­னிடம் தெரி­வித்­தி­ருந்­தீர்கள். இது தொடர்­பாக நான் மாவை அண்­ணனைத் தொடர்­பு­கொண்­ட­போது அவர், 'நான் இப்­பொ­ழுது ஆளுநர் அலு­வ­ல­கத்தில் இருக்­கிறேன். நீங்கள் சம்­பந்­த­ருடன் கதைத்­து­விட்­டீர்­கள்­தானே அதுவே போது­மா­னது' என்று சொல்லி தொலை­பே­சியைத் துண்­டித்­து­விட்டார். பின்னர் அழைக்­க­வில்லை. ஏனை­ய­வர்­க­ளு­டனும் தொடர்பு கொள்ள முடி­ய­வில்லை. ஒரு வழி­யாக புளொட் கட்­சியைச் சேர்ந்த முக்­கி­யஸ்தர் ஒரு­வ­ரிடம் கூட்டம் பற்­றிய தக­வலைத் தெரி­வித்தேன். இப்­படி ஒரு இக்­கட்­டான நேரத்தில் ஒன்­றி­ணைந்த செயற்­பாட்­டிற்­காக அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போதும் உங்­களால் உரி­ய­வ­கையில் செய­லாற்ற முடி­யாமல் போயி­ருந்­தது.

இந்த நிலையில், முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக பங்­கா­ளிக்­கட்­சி­களும், நியா­யத்தின் பக்கம் நின்ற மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும் அணி­தி­ரண்­டி­ருந்­தனர். நாங்கள் தலை­யி­டாமல் இருந்­தி­ருந்தால் நிலைமை மிகவும் மோச­மாகிப் போயி­ருக்கும்.

நாம் கூடிப் பேசி­யி­ருந்தால் பிரச்­சி­னையை சுமு­க­மாக முடித்­தி­ருக்க முடியும். இறு­தியில் பங்­கா­ளிக்­கட்­சிகள் மதத்­த­லை­வர்கள் ஆகி­யோரின் முயற்­சி­யா­லேயே வடக்கு மாகா­ண­ச­பையின் பிரச்­சி­னையை முடி­விற்குக் கொண்­டு­வ­ர­மு­டிந்­தி­ருந்­தது. கூட்­ட­மைப்பின் பெயரில் தமி­ழ­ரசுக் கட்­சியை வளர்க்க வேண்டும் என்ற குறு­கிய சிந்­த­னையே இவ்­வ­ளவு பிரச்­சி­னை­க­ளுக்கும் காரணம் என்று எனது விளக்­கத்தை முன்­வைத்தேன்.

இதன்­போது என்­னையும் சேர்த்து பன்­னி­ரண்டு உறுப்­பி­னர்கள் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். அவர்­களில் ஒரு­வரும் இடை­ந­டுவில் பேச­வில்லை. எனது உரையைத் தொடர்ந்து திருவாளர் சுமந்திரன் உரையாற்றும்போது நான் வைத்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டார். மேலும், அடுத்தமுறை மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் அவரை வேட்பாளராகத் தெரிவு செய்யாவிட்டால் நீங்கள் போராட்டம் நடத்துவீர்கள். நீங்கள் மூவரும் இணைந்து அவருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று தெரிவித்தாரர். ஆம் இந்தமுறை நீங்கள் அறிமுகம் செய்த விக்னேஸ்வரனை அடுத்தமுறையும் நாம் ஆதரிப்போம் என்று பதிலளித்தேன்.

தமிழரசுக் கட்சியின்மீதும் கூட்டமைப்பின் தலைவர்மீதும் எம்.ஏ.சுமந்திரன்மீதும் நான் வைத்த விமர்சனங்களை திருவாளர் சுமந்திரன் ஏற்றுக்கொண்டது போலவே சரவணபவன் அவர்களும் ஏற்பதாகக் கூறினார்.