வாயில் வைத்தவுடன் கரையும் ரவா புட்டிங்

11 Apr, 2025 | 06:12 PM
image

ரவா புட்டிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.....

தேவையான பொருட்கள் ; 

  • பால்-500ml
  • சர்க்கரை-150கி
  • ரவை-100கி
  • முட்டை-2
  • வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  • வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு

செய்முறை ; 

1. வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் வெண்ணெய்யை நன்றாக தேய்த்து வைத்து கொள்ளவும்.

2. பின்னர் போத்திரம் ஒன்றில் சர்க்கரை இட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நிறம் தேன் நிறமாக மாறும் வரை நன்கு கொதிக்க விடவும்.

3. சர்க்கரை நிறம் மாறிய பின்னர் அதை வெண்ணெய் தேய்த்து வைத்த பாத்திரத்தில் ஊற்றவும். 

4. பினன்ர் மற்றுமொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

5. பால் நன்றாக கொதிக்கும்போது அதில் ரவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

6. பாலில் ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

7. பின்னர் அதில் வெண்ணிலா எசன்ஸ், முட்டை சேர்த்து நன்கு கிளறவும்.

8. இந்த கலவையை வெண்ணெய் பாத்திரத்தில் ஊற்றவும்

9. இதை இட்லி பாத்திரத்தில் உள்ளே வைத்து மூடவும்.

10. பின்னர்  20 நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை இறக்கி ரவா புட்டிங்கை குளிரூட்டியில் வைத்து அனைவருக்கும் பரிமாறவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right