( டானியல் மாக்ரட் மேரி )
பிறருக்காக யாசகம் செய்வது எமது உள்ளத்தை புனிதமாக்கும் என செந்தில் குமரன் நிவாரண நிதியபொறுப்பாளர் செந்தில்குமரன் தெரிவித்தார்.
செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் கீழ் 150 உயிர்காக்கும் இதய சத்திர சிகிச்சையை நிறைவு செய்ததை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) கொழும்பு லங்கா வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதன் போது உரையாற்றுகையிலேயே செந்தில் குமரன் நிவாரண நிதியபொறுப்பாளர் செந்தில் குமரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
150 உயிர்கள் இருதய சத்திர சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன. மனிதத்தின் மகத்துவத்தை வாழ்த்த வேண்டிய இந்த தருணமானது, மங்கல விளக்கேற்றுதல் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமானது.
செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் பொறுப்பாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகனை தெரிவித்து கொள்கின்றேன். 150 இதய சத்திர சிகிச்சை மேற்கொண்டதை கொண்டாடும் இந்த தருணம் இவ்வளவு சீக்கிரத்தில் வரும் என நான் எனது கனவிலும் நினைத்து பார்க்க வில்லை.
சுனாமியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எவ்வளவு உயிர்கள் பலி போனது என எமக்கு தெரியும். அதற்கு பிறகு தான் நாம் இந்த திட்டத்தை குறித்து சிந்தித்தோம். எனக்கு பாடும் திறமை இருக்கிறது. இசை நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் இருந்து கிடைக்கப்பெறும் நிதியை சேர்த்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினேன். சேர்க்கப்படும் நிதி குறித்து சகல விபரங்களும் எனது முகப்புத்தகத்தில் எல்லோரும் பார்க்கக்கூடிய வண்ணம் பதிவு செய்துள்ளேன்.
கனடாவில் நடாத்துகின்ற இசை நிகழ்ச்சிகளுக்கு 20 ஆயிரம் டொலர் செலவாகும். எங்களது போக்குவரத்து செலவு மற்றும் இங்கு பணிபுரிகிறவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போன்ற செலவுகளை நானும் எனது மனைவியுமே செய்து வருகின்றோம். மற்றும் இதய துடிப்பு நின்றுவிடும் தறுவாயில் இருப்பவர்களுக்கு நாங்கள் இந்த நிவாரண நிதியை வழங்கி வருகின்றோம்.
வைத்தியர் லக்ஷமன், வைத்தியர் குருபரண், வைத்தியர் அருள்நிதி, வைத்தியர் ரெஜினா ஆகியோருக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் தான் இதய நோயினால் மரணிக்கிறவர்கள் குறித்து என்னிடம் தெரிவித்தனர். 2005 ஆம் தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை இதற்காக முயற்சி செய்தேன். ஆனால் 2016 ஆம் ஆண்டு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினேன்.
இத் திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்புடுத்துவதற்கு மூலகாரணமாக இருப்பவர்கள் கொடையாளிகள். இவர்கள் தான் உங்களுக்காக தானத்தை தருபவர்கள். செந்தில் குமரன் ஒரு கருவியாகவே இருக்கிறார். எனக்கு பின்னால் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பிறருக்காக யாசகம் செய்வது எமது உள்ளத்தை புனிதமாக்கும். மேலும் கனடாவிலுள்ள கந்தசாமி ஆலயத்தினால் நிதி உதவி கிடைக்கப்பெற்று பயனடைந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து இதய சத்திர சிகிச்சைக்கான தேடல் குறித்த காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
அடுத்ததாக, இதய சத்திர சிகிச்சையை மேற்கொண்டவர்கள் தங்களின் குடும்ப சூழல், தங்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு மத்தியில் கனடா நிவாரண நிதியத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட நன்மை குறித்து தெரிவித்தனர்.
குறித்த அறச் சேவையானது பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையில் எவ்வாறு முக்கிய செல்வாக்கை வகித்தது என்பது அவர்களின் உரையில் இருந்து வெளிப்பட்டது. மேலும் குறித்த சத்திர சிகிச்சைக்கு நிதி உதவியை வழங்கியோருக்கும் வைத்தியர்களுக்கும் கொழும்பு லங்கா வைத்திய சாலைக்கும் தங்களது உணர்வுபூர்வ நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
அத்தோடு இந்த சேவையில் உதவி செய்த வைத்தியர்கள் , தாதியர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இது நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு தருணம். 150 வது மைல்கல் என்பது வெறுமனே ஒரு எண் மட்டுமல்ல. காப்பாற்றப்பட்ட உயிர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய எதிர்பார்ப்பும் புதிய வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது.
கனடா தமிழ் சமூகம் மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களின் தாராள மனப்பான்மை மற்றும் அவர்களின் அயறாத முயற்சியின் அடையாளமாக இந் நிகழ்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ், செந்தில் குமரன் நிவாரண நிதியத்தின் பொறுப்பாளர் செந்தில் குமரன், பிரபல வைத்தியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
( படங்கள் ஜே.சுஜீவகுமார், டானியல் மாக்ரட் மேரி )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM