காய்ச்சல், சளி, இருமல் உடனே குணமாக நண்டு மிளகு சூப்

11 Apr, 2025 | 05:46 PM
image

தலை வலி, காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தொண்டை கரகரப்பு ஆகியவை உடனே குணமாகுவதற்கு நண்டு மிளகு சூப் சிறந்த மருந்தாகும். 

நண்டு மிளகு சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • 4 நண்டுகள்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 மேசை கரண்டி எண்ணெய்
  • 1.5 அங்குலம் இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1/4 தேக்கரண்டி சோம்பு
  • 10 கறிவேப்பிலை
  • 1 தக்காளி
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1.5 லீட்டர் தண்ணீர்
  • 1/2 கப் கொத்துமல்லி இலைகள்

தூள் செய்ய :

  • 2 மேசைக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி சோம்பு

செய்முறை :

1. நண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். 

2. ஒரு இடி கல்லை வைத்து நண்டின் ஓட்டை லேசாக தட்டிக் கொள்ளவும். இதனால் நண்டில் உள்ள சாறு முழுமையாக சூப்பில் இறங்கும். 

3. ஒரு இடுகையில் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை இடித்து எடுக்கவும்.

4. ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

5. பின்னர் அதில் இடித்து எடுத்த வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து லேசாக வதக்கவும். 

6. கூடவே மஞ்சள் தூள் மற்றும் இடித்து வைத்த தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

7. வதங்கிய பின் இடித்து வைத்துள்ள நண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும். பிறகு தண்ணீர் ஊற்றவும். மண் சட்டியை மூடி விட்டு தீயில் அரை மணிநேரம் வேகவிடவும். 

8. மிளகு சீரகம் சோம்பு இவற்றை இடி கல்லில் இடித்துக் கொள்ளவும்.

9.அரை மணி நேரம் கழித்து நண்டு சூப்பில் இடித்து வைத்த மிளகு பொடியை சேர்த்துக் கலந்து விடவும். கூடவே நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறுதியாக உப்பு சேர்க்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right