மேஷம்
ஆக்கபூர்வமான செயல்களை செய்து முன்னேறும் மேஷ ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த குரு இனி முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவது மிக சிறப்பு.
தன ஸ்தானத்தில் இதுவரை இருந்து பல்வேறு நன்மைகளை செய்து வந்த குரு பகவான் திருமண தடைகளால் தள்ளி போன காரியங்கள் சிறப்பாக அமையும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். எடுத்த சில காரிங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். கூட்டு தொழிலின் மூலம் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.
உங்களின் பாக்கிய ஸ்தானாதிபதி வீட்டை அவரே பார்வை இடுவதால் பல்வேறு காரணங்களால் தள்ளிபோய் கொண்டிருந்த காரியம் செயல்பட தொடங்கும். குழந்தை பாக்கியம், குல தெய்வத்தின் வழிபாடுகள், தீர்த்த யாத்திரை சென்று வருதல் வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு சிறப்பாக செயற்படுவீர்கள்.
உங்களின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். லாபஸ்தானத்தில் சனி ராகுவை பார்ப்பதால் செய்யும் தொழில் பலவழிகளில் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். 11.05.2025 முதல் குரு உங்களுக்கு நற்பலன்களை தருவார். 06.06.2025 முதல் 06.07.2025 வரை அஸ்தங்கம் ஆவதால் தங்கத்தை பத்திரமாக வைத்து கொள்வது நல்லது. 08.10.2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் அதுவரை நன்மை உண்டாகும். சிலர இழத்த சொத்துக்களை மீட்பர். எதிர்ப்புகளை குறைத்து சுமுகமான சூழ்நிலையும் உருவாகும். தொடர்ந்து இறை வழிபாடு செய்வது நல்லது.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் நிற வஸ்திரம் இட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.
ரிஷபம்
தன்னிகரில்லாத செயல்களை துரிதப்படுத்தி செயற்படும் ரிஷப ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் வரும் 11.05.2025 முதல் தனஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானமான இடங்களை பார்வையிடுவது உங்களின் ராசிக்கு ஏழாம் இடத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் முன்பு பார்த்து வந்தால் நற்பலன்களை அடைந்து வந்தீர்கள். இனி மறைவு ஸ்தானங்களின் பார்வையால் உங்களுக்கு கடன் தொல்லைகளிலிருந்து விடுபடும் வாய்ப்புகள் அமையும்.
ஆறாம் இடத்தை குரு பார்ப்பதால் வங்கி மூலம் கடன் பெற்று பழைய கடன்களை தீர்த்துக்கொள்வதும், எடுத்த காரியத்தில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கி சுபீட்சம் உண்டாகும். எதையும் பிறரின் உதவியுடன் செய்து வந்த நீங்கள் இனி தனித்து செயற்படுவீர்கள். 06.06.2025 முதல் 06.07.2025 வரை குரு அஸ்தங்கம் அடைவதால் பெரும்பாலும் தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து அத்தியாவசியமான செயல்களை செய்வது நல்லது.
அட்டம ஸ்தானாதிபதி குரு அந்த இடத்தை பார்ப்பதால் நம்பிக்கையான நண்பர்கள், உறவுக்காரர்களாக இருந்தாலும் பிணையிடுவதும் நான் பொறுப்பு என்று ஏற்றுக்கொள்வதும் தவிர்ப்பது நல்லது.
உங்களின் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செய்யும் தொழில் சிறப்பாக அமையும். இருக்கும் தொழிலை விருத்தி செய்துகொள்வதற்குரிய வேலைகளை செய்வது நல்லது. 08.10.2025 முதல் அதிசாரமாக குரு கடகத்துக்கு செல்வதால் அதுவரை உங்களின் செயல்பாடு சற்று கவனமாக இருப்பது நல்லது. அதிசார பலன்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எதையும் திறம்பட செய்து வளம் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு இணைவு பெறுவதும் குரு பார்வை பெறுவதும் உங்களுக்கு குரு சண்டாள யோக பலன்களை பெற செய்யும்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமை காலை 6 - 7 மணிக்குள் நவகிரக குருவுக்கு மிளகு கலந்த அன்னம் வைத்து மஞ்சள் தூவி நெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள நற்பலன்கள் சிறப்பாக அமையும்.
மிதுனம்
நல்லதை நினைத்து நல்லதை செய்துகொண்டு வரும் மிதுன ராசி வாசகர்களே!
இதுவரையிலும் விரைய குருவாக இருந்த குரு பகவான் இனி வரும் 11.05.2025 முதல் ஜென்ம குருவாக ராசியில் அமர்கிறார். கடந்த காலத்தில் தேவையற்ற பல செலவுகள் வந்து சிரமத்தில் இருந்தீர்கள் இனி ஜென்ம குரு இருக்குமிடத்தை காட்டிலும் பார்க்கும் இடம் சிறப்பாக அமையும்.
ஜென்ம குருவாக வந்து உங்களின் அனைத்து செயல்பாடுகளிலும் துரிதமாக செயல்படும் விதம் புதிய விடயங்களை பற்றி தெரிந்துகொள்ளுதல் எதையும் செயற்படுத்துவதற்கு முன்பு குறிப்பெடுத்துக்கொண்டு செயற்படுதல் நல்லது. ஞாபக மறதிகள் வரும் என்பதால் நினைவுபடுத்தி கொள்வது நல்லது.
உங்களின் களத்திரஸ்தானத்தை பார்வையிடுவது திருமண காரியங்கள் பேசுதல், திருமணம் நடத்தல் வேறு சுபகாரியங்கள் வீட்டில் நடத்துதல் போன்ற காரியம் நடக்கும். மன அழுத்தம் அதிகமாக வரும் போது சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. 08.06.2025 முதல் 08.07.2025 வரை குரு அஸ்தமானமாகும். காலம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. கொண்டுசெல்லும் பொருட்களை பாதுகாத்துக்கொள்வது அவசியம்.
உங்களின் பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுவது புனித யாத்திரை சென்றுவருதல், கோவில் காரியங்களில் முன்னின்று நடத்துதல். நற்காரியங்களும் உதவிகள் செய்தல் போன்ற செயல் நன்றாக நடக்கும். குரு பார்க்கும் இடம் சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களின் அனைத்து காரியங்களும் வளம் பெறும். குடும்ப சூழ்நிலைகளை மறந்து ஆன்மிக ஈடுபாடுகளை வளர்த்து கொண்டு அதற்கு நேரம் ஒதுக்கி செயற்படுவீர்கள். புதிதாக ஆன்மிக குருமார்களின் சந்திப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 08.10.2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் மறைவு ஸ்தானங்களை பார்வையிடுவது கடன் பிரச்சினை நீண்டகால தீராத விடயங்கள் அனைத்து தீர்ந்து சுபீட்சம் பெறுவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் கொண்டை கடலையில் மாலை கட்டிப் போட்டு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து நெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
கடகம்
எதை செய்தாலும் முன்கூட்டியே யோசித்து செயற்படும் கடக ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் லாபஸ்தானத்தில் இருந்த குரு பகவான் இனி விரைய குருவாக வரும் 11.05.2025 முதல் அமர்வதும் சுகஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும், அட்டம ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் உங்களுக்கு நன்மையும் தீமையும் வெற்றியை தரும்.
சுகஸ்தானமான நான்காமிடம் குருவால் பார்க்கப்படுவதால் வீடு கட்டுதல், வீடு பராமரிப்பு பார்த்தல், வாகன வசதிகளை பெருக்கிக்கொள்ளல் போன்ற வழிகளில் நன்மையை அடைவீர்கள். உடல்நலனின் முன்னேற்றம் உண்டாகும். ஏற்கனவே உடல் நலமின்றி இருப்பவர்கள் உடல்நல மேன்மை பெறுவீர்கள். தாயார் உடல் நலனில் கவனம் செலுத்துவீர்கள். பொது நலன் கருதி நீங்கள் செயல்படுவது சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும்.
சத்ரு, ரண, ருண ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற பொருளாதார பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பை பெற்று நலம் பெறுவீர்கள். கடன் தீர்ப்பதன் மூலம் பல நாள் கஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளால் பட்ட துன்பம் விடுபடும். வங்கி மூலம் கடன் பெற்று செய்தொழிலை விருத்தி செய்துகொள்வீர்கள். அட்டம சனியுடன் ராகு இணைந்திருப்பதால் எந்த காரியமாக இருந்தாலும் அதில் சிலரின் வில்லங்கம், விவகாரம் வந்து தொல்லை கொடுத்து வந்த நிலை மாறி நன்மை பெறுவீர்கள்.
எதிர்வரும் 08.10.2025 முதல் குரு அதிசாரமாக அமர்வது உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக அமர்ந்து எடுத்த காரியத்தில் நினைத்தபடி செயற்பட்டு வெற்றியை பெறுவீர்கள். முயற்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து மேன்மை அடைவீர்கள். எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தி சரியாக செயற்பட்டு பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்று சேமிப்புகளை ஊக்கப்படுத்துவீர்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நோன்பிருந்து நவகிரக குருவுக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் இட்டு மஞ்சள் நிற பூ வைத்து நெய் தீபமிட்டு வர நினைத்த காரியம் தடையின்றி சுபீட்சமாக அமையும்.
சிம்மம்
வெற்றியின் இலக்கை நோக்கி தினம் செயற்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து குரு 11.05.2025 முதல் லாபஸ்தானமாகிய மிதுனத்தில் அமர்கிறார். குரு பார்க்குமிடம் சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும்.
குரு மூன்றாமிடமான முயற்சி, கீர்த்தி ஸ்தானத்தை பார்ப்பதால் நீங்கள் எடுக்கும் சகல முயற்சிகளுக்கு நற்பலன்களை பெற்று தரும். உறுதுணையாக செயல்பட உங்களுக்கு நண்பர்கள் உதவி கிடைக்கும். எந்த செயலுக்கு ஊக்கம் கிடைக்கும் போது அது மேலும் பல வழிகளில் வெற்றியை பெற்று தரும். நீங்கள் தொழிலில் பல இடையூறுகளை சந்தித்து வந்தீர்கள். இனி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
பஞ்சமஸ்தானத்தை குரு பார்ப்பதால் குரு அருளால் உங்களின் பூர்வீக சொத்து சம்மந்தமான சில விவகாரங்கள் தீரும். குல தெய்வ வழிபாடு மூலம் உங்கள் இலக்கு விரைவில் நிறைவேறும் பாதியில் நின்ற காரியங்கள் இனி செயல்படதுவங்கும். நினைத்த காரியம் கைகூடும்.
களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் நடக்காதவருக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவருக்கு கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய திட்டங்களுக்கு நல்ல வழி கிடைக்கும். எதிர்பார்த்த சில விடயம் விரைவில் நடக்கும். உங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற நல்ல வழி கிடைத்து அதற்கு உண்டான பணிகள் நடக்கும்.
உடல்நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று வீர்கள். பொது நலத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை நினைத்து காரியத்தை துவங்குவது இன்னும் சிறப்பான பலனை பெற்று தரும்.
கன்னி
கண்ணியமாக எந்தவொரு செயலையும் செய்து முடிக்கும் கன்னி ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு இனிவரும் 11.05.2025 முதல் உங்களின் தனஸ்தானத்தையும் சுகஸ்தானத்தையும் சத்ருஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வாழ்வில் பொன்னான நாளில் அமையும்.
உங்களின் தொழில்ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது பொதுவாக குரு பத்தில் அமர்ந்தால் பதவி பறிபோகும், தொழில் கெடும் என்று சொல்வார்கள். உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனும் ஒருவரே என்பதால் குரு பாதி பலன்களை குறைத்துக்கொள்வார். தொழிலில் லாபமும் நஷ்டமும் கலந்தே உண்டாகும். எளிமையான வாழ்க்கையை விரும்பும் உங்களுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
சுகஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடனில் இருந்து மீள்வீர்கள். உடல்நலனில் இருந்த குறைபாடுகள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள். காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் காரியத்தில் இறங்கி வேலை பார்ப்பீர்கள். தேவைகளை உணர்ந்து அதற்கு தகுந்தபடி நல்ல பலன்களை பெறுவீர்கள். 08.06.2025 முதல் 08-.07-.2025 வரை சற்று கவனமாக இருப்பது நல்லது.
உங்களின் சத்ரு ஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவதும் குரு பார்வை இருவருக்கும் அமைவதால் குரு பார்வையால் மறைமுகமான சில எதிரிகள் உங்களின் செயல்களை தகுந்த வந்த நிலை மாறி உங்களுக்கு சாதகமாக செயற்பாடுகள் அமையும். சிலருக்கு வாங்கிய கடன் தீரும். வரவேண்டிய இடத்தில் பணம் வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.
08.10.2025 முதல் குரு கடகத்தில் அதிசாரமாக அமர்வது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல வழி கிடைக்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். வெளிநாடு வேலை தொடர்புகள் உண்டாகும்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை இட்டு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ள சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.
துலாம்
எதையாவது சாதிக்க வேண்டுமென்ற கொள்கை கொண்ட துலாம் ராசி வாசகர்களே!
இதுவரை அட்டம குருவாக இருந்த குரு பகவான் இனிவரும் 11.05.2025 முதல் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியையும், மூன்றாமிடம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இதுநாள் வரை பல தடைகளை சந்தித்து வந்த உங்களுக்கு நல்ல காலமாக அமையும்.
உங்களின் ராசியை குரு பார்ப்பதால் உடல் நலனில் வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்து வருபவருக்கும். மருத்துவ துறையில் இருப்பவருக்கு இந்த காலம் நல்லதாக அமையும். தங்கம், வெள்ளி வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சொந்த ஊரிலிருந்து வெளியில் சென்று பிரபலம் அடைவீர்கள். மன சஞ்சலங்கள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.
மூன்றாமிடமான முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். எடுத்த செயலில் ஊக்கமும், ஆக்கமும் உண்டாகி பெரருளாதாரத்தில் மேன்மை பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் பட்டதுன்பம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். ஆன்மீக சேவையும், ஆர்வமும் உங்களுக்கு பக்க பலமாக செயல்பட்டு மேன்மை பெறுவீர்கள்.
பஞ்சமஸ்தானத்தில் ஏற்கனவே சனி / ராகு இணைந்திருப்பது அவர்களை குரு பார்வை வருவது குலதெய்வ அனுகிரகமும் கொடுத்த இடத்தில் பணம் வந்து சேரும். நீங்கள் கொடுத்த உத்திரவாதத்தை செயல்படுத்துவீர்கள். பூர்வீக இடத்தில் உங்கள் பெயருக்கு நிறைவான சூழ்நிலை உண்டாகும்.
08.10.2025 முதல் குரு உங்களின் தொழில் ஸ்தானத்தில் வருவதால் புதிய தொழில் முயற்சிகளை கைவிட்டு செய்யும் தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமேற்றி குரு காயத்ரி மந்திரம் சொல்லி கடலை பருப்பு நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியைத் தரும்.
விருச்சிகம்
மனவலிமையுடன் எதையும் முழு முயற்சியுடன் செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு இனிவரும் 11.05.2025 முதல் தனஸ்தானத்தையும், முயற்சி ஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். அட்டம குருவாக இருப்பது சில நேரம் பணதட்டுப்பாடுகளை தருவதும் ஆவணங்கள் மூலம் சிக்கலும் வரலாம் என்பதால் அடுத்தவருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது.
தனஸ்தானத்தை குரு பார்ப்பது தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டிவரும். அடுத்தவரை நம்பி செயற்படும் எந்த காரியமும் சிறப்பாகவோ, நல்லதாகவோ அமையாது என்பதால் அடிக்கடி அதில் கவனம் செலுத்துவது நல்லது. வரக்கூடிய வருமான வாய்ப்புகளை சேமிக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். ஏதாவது செலவீனம் வந்து மறையும். புதிய தொழில்வாய்ப்புகள் வந்தாலும் அதனை தவிர்த்து நல்ல முயற்சிகளை ஊக்கப்படுத்தி செயற்படுவதன் மூலம் நன்மை பெறுவீர்கள்.
உங்களின் அர்த்தாஸ்டம சனியுடன் ராகு இணைவதால் பல உடல்நல குறைபாடுகளும் தூக்கமின்மை, பல எண்ண அலைகளால் வரும் துன்பங்களுக்கு குரு பார்வையால் அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பெறும் கஷ்டத்தை அனுபவித்து தீர்த்துவிடுவீர்கள். தொழிலாளர்களின் கஷ்டங்களை தன் கஷ்டம் போல் நினைத்து அவர்களுக்கு உங்களால் உண்டான உதவிகளை செய்வீர்கள்.
விரையஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஒரு புறம் செலவுகள் வந்தாலும் அதனை சரி செய்ய ஏதாவது வழியில் பணப்புழக்கம் வந்து உங்களுக்கு எதிலும் சிரமமின்றி உறுதுணை கிடைக்க பெறுவீர்கள். கடனாக இருந்தாலும் கடமையாக இருந்தாலும்
அதை சமாளிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். காலத்தையும் நேரத்தையும் வீண் செய்யாமல் உடனே செய்துவிட வேண்டுமென்று செயற்பட்டு வெற்றியை பெறுவீர்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண பட்டு வஸ்திரத்தை பைரவருக்கு கொடுத்து உளுந்து வடை மாலை போட்டு தேங்காய் முடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நற்பலன் தரும்.
தனுசு
தனக்கென்று ஒரு கொள்கை வைத்து செயற்படும் தனுசு ராசி வாசகர்களே!
இதுவரை ராசிநாதனாகிய குரு ஆறாமிடத்தில் இருந்து வரும் 11.05.2025 முதல் ராசியை பார்ப்பதும் ஏழாமிடத்தில் அமர்வதும் லாபஸ்தானத்தையும், முயற்சி ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாகவே அமையும். எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும்.
ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் மனசஞ்சலங்கள் நீங்கி பல நாட்கள் மன வருத்தம் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி படிப்படியாக இயல்பு நிலைக்கு வருவீர்கள். எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டுமென்று செயற்பட்டுக் கொண்டிருப்பீர்கள். முக்கிய விஜயங்களில் தனி திறமை கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
உங்களின் முயற்சிகள் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையும். செய்யும் தொழிலிலும் இனி உங்களின் ஈடுபாடும் தொடர் முயற்சியும் உங்களை மேலும் வெற்றி பெற செய்யும் சனி / ராகு மூன்றாமிடத்தில் இருப்பது உங்களுக்கு நல்ல சூழ்நிலை என்றாலும் அவர்களுக்கு குருவின் பார்பையும் பெறுவது மிக சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.
லாபஸ்தானத்தை குரு பார்வையிடுவது எதிலும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து லாபகரமான வளர்ச்சியை பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையை பெறுவீர்கள். பல சோதனைகளை கடந்து மேன்மையை அடைவீர்கள். எதிர்கால வளங்களை உறுதி செய்து வெற்றியை காண்பீர்கள். உறவினர்கள் உங்களின் அன்பை பெறுவார்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குரு வழிபாடு செய்து தீபமேற்றி வேண்டிக்கொள்வதும் ஜீவசமாதிகளில் சென்று சிறிது நேரம் தியானம் செய்து வருவதும் சிறப்பான பலனை பெற்று தரும்.
மகரம்
பொதுநல நோக்கோடு செயற்பட்டு விளங்கும் மகர ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருந்த குரு இனிவரும் 11.05.2025 முதல் ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் தடைபட்ட பல காரியங்கள் சிறப்பாக இயங்கக்கூடிய சூழ்நிலை அமையும்.
முக்கிய காரியங்களில் கவனம் செலுத்தி உங்களில் ஒவ்வொரு செயலையும் சிறப்பாக செய்து வருவீர்கள். ஏற்கனவே ராசிநாதன் ராகுவுடன் தனஸ்தானத்தில் இருப்பதும் குருவின் பார்வை இருவருக்கும் பெறுவது உங்களின் தொழிலில் சிறந்து விளங்குவதுடன் செய்யும் உத்தியோகத்தில் உயர்பதவியும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். பண தட்டுப்பாடு நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத தன வரவு உங்களை மகிழச் செய்யும்.
தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் இதுவரை நிரந்தர தொழிலின்றி இருந்தவர்களுக்கு விரைவில் தொழில் வளர்ச்சியும் நல்ல தொழிலும் அமையும். ஆடம்பர பொருள் விற்பனையாளர்கள் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர்நிலையை அடையும் வாய்ப்பு அமையும்.
விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செலவுகள் குறைத்து வளம் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் இனி வெற்றி பாதையில் சிறக்கும் வழிகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள்.
உறவுகளால் மதிக்காமல் இருந்த நிலை இனி மாறி நல்ல உறவுகளை புதுப்பித்து கொண்டு வளம் பெறுவீர்கள். எடுத்த காரியம் இனி ஜெயமாகும். பொருளாதார நிலை மேம்படும்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு கடலை மிட்டாய் வைத்து நெய் தீபமேற்றி வழிபாடு செய்து வேண்டிக்கொள்ள அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும்.
கும்பம்
துணிச்சலும் தைரியமும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காமிடத்தில் இருந்த குரு இனிவரும் 11.-05-.2025 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியை பார்ப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக்கொள்வீர்கள். தைரியமும் துணிச்சலும் உங்களின் வாழ்வில் வளம் பெற செய்யும்.
ஏற்கனவே ராசியில் ராசிநாதனுடன் ராகு இணைவு பெற்றிருப்பதும் குரு பார்வையால் ஸ்தான பலம் பெறுவதால் உடல்நலனில் நல்ல முன்னேற்றமும் எடுத்த காரியம் வெற்றியும் வேண்டாத விடயங்களை தவிர்த்து மேலும் நற்பலன்களை பெறுவீர்கள். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் காலமாக இது அமையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால் புனித யாத்திரை சென்று வருதல் நல்ல படியாக தொழில் செய்யவும். ஏற்கனவே இருக்கும் தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அமையும். கொடுத்த வாக்குறுதிகளையும் செயல்களையும் நிறைவேற்றிக்கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் மேன்மை அடைய செய்யும்.
லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் செய்யும் தொழிலிலும், வேறு வழிகளிலும் உங்களுக்கு பணபுழக்கம் இருக்கும் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். காத்திருந்து செயல்படுவது போல வாய்ப்பு தேடி வந்து உங்களை ஊக்கபடுத்தும். நினைத்த காரியம் கைகூடும்.
உடல்நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய திட்டங்களில் இனி முழு கவனம் செலுத்தி நன்மை அடைவீர்கள். 08.06.2025 முதல் 08.07.2025 வரை சற்று கவனமாக இருப்பது நல்லது. எதையும் யோசித்து செயற்படவும்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் பைரவருக்கு தேங்காய் உடைத்து அதில் நெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை போட்டு வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாக அமையும்.
மீனம்
தன்னை சுற்றி இருப்பவர்கள் நலம் பெற நினைக்கும் மீன ராசி வாசகர்களே!
இதுவரை மூன்றில் இருந்த ராசிநாதன் குரு இனிவரும் 11.05.2025 முதல் சுகஸ்தானத்தில் அமர்வது உங்களின் ராசிக்கு மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுவது தடைபட்ட காரியம் செயல்பட தொடங்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு அமர்வது கூட்டு தொழிலில் சிலருக்கு பிரச்சினை உண்டாகும். பேசுவது போல நடக்காமல் உடன் இருந்து சிலர் மாறுவது மனவருத்தத்தை தரும். உடல் நலனின் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டி வரும். நரம்பு சார்ந்த பிரச்சினை உண்டாகும். வாகன வசதிகளை குறைத்துக்கொள்ள வேண்டிவரும். அலைச்சல் அதிகரிக்கும்.
அட்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சில தடைகள் நீங்கி நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வழக்குகள் சீக்கிரம் முடிவுக்கு வரும். எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அது இனி முடிவுக்கு வரும். மலை போல் இருந்த விடயம் பனி போல மறையும். எதற்கும் பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. குறை சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இனி அமைதி ஆவார்கள்.
விரைய சனியுடன் ராகு இணைவு பெறுவது வெளிநாடு செல்தல். வெளிநாட்டுத் தொடர்பு உருவாக்குதல். நினைவுக்கு வராத பல காரியங்கள் நினைவுக்கு வந்து செயற்பட தொடங்கும். மேலும் குரு விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் தேவையற்ற விரையம் குறைந்து நலம் பெறுவீர்கள். புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
அசையாத சொத்துகள் வாங்குதல், கட்டிய வீடு வாங்குதல் மூலம் சுப விரையங்கள் உண்டாகும். இதன் மூலம் உங்களின் பலநாள் குறை நீங்கி வளம் பெறுவீர்கள்.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமை காலை 6 - 07.30 மணிக்கு விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு அரிசி மாவில் சர்க்கரை கலந்து நைவேத்தியம் வைத்து வேண்டிக்கொள்ள நினைத்த காரியம் வெற்றியை தரும்.
- கணித்தவர் : ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM