கடன்களை நீக்குவதற்கான பிரத்தியேக இறை வழிபாடு

11 Apr, 2025 | 04:30 PM
image

இன்றைய திகதியில் குறைந்த முதலீட்டில் தொழில் செய்பவர்களில் இருந்து கூடுதலான முதலீட்டை மேற்கொண்டு வணிகம் நடத்துபவர்களும் நாளாந்தம் கடன் வாங்காமல் இருப்பதில்லை.  வேறு சில மத்திய தர வர்க்கத்து பிரிவினர் எதிர்பாராமல் ஏற்பட்ட சம்பவத்தின் காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

கடனை எளிதாக பெற்ற இவர்கள் அதனை திருப்பி செலுத்துவதற்கு கடினமான சூழல்களையே பெரும்பாலும் எதிர்கொள்கிறார்கள்.  இவர்களுக்கு கடன் சுமையிலிருந்து நிவாரணம் கிடைக்க எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான முருக பெருமானின் வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சஷ்டி திதியும் செவ்வாய்க்கிழமையும் இணைந்து வரும் நாளில் செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானை தரிசித்து ‌கடனை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கு என பிரார்த்திக்க வேண்டும். முடிந்தால் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசித்தால் கடன் சுமை விரைவாக குறையும்.

வேறு சிலர் சைவத்தை வணங்க மறுத்து வைணவத்தை உறுதியாக பின் தொடர்வார்கள். இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அருகில் இருக்கும் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வணங்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் வரை மேற்கொண்டாலோ அல்லது 48 நாட்கள் வரை உறுதியுடன் நம்பிக்கை இழக்காமல் பின்பற்றினாலோ உங்களுடைய கடன் சுமை குறைய தொடங்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நினைக்கும் காரியங்களில் வெற்றி பெற சங்கு...

2025-04-26 14:04:15
news-image

பில்லி சூனிய பாதிப்பிலிருந்து விடுபட உதவும்...

2025-04-24 14:39:26
news-image

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஏழு...

2025-04-24 14:27:07
news-image

தன வசியம் நிகழ்த்தும் யோகினி வழிபாடு..!?

2025-04-23 16:11:22
news-image

வராத பணத்தை வசூலிப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-04-22 16:24:25
news-image

தங்க நகைகளை சேமிப்பதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-04-21 15:35:22
news-image

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி பிரத்யேக...

2025-04-19 17:24:56
news-image

நினைத்ததை நிறைவேற்றுவதற்கு நாளாந்த தீப வழிபாடு

2025-04-18 18:32:08
news-image

‘மரணத்துக்கு ஒப்பான முடிகாணிக்கை…?’

2025-04-18 15:27:33
news-image

எந்த பூவை பாவிக்கக்கூடாது?

2025-04-18 12:19:55
news-image

உங்கள் குல தெய்வம் யாரென தெரியாதா...

2025-04-17 14:17:35
news-image

தன வரவை சாத்தியப்படுத்தும் பூக்கள்..!!

2025-04-17 03:54:56