பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது தொடங்கி இருக்கும் கோடை காலத்தில் வெப்பத்தின் அளவு இயல்பான விட கூடுதலாக அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதன் காரணமாக 12 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் , மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்மணிகளுக்கும் அறிகுறியை வெளிப்படுத்தாத ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் அதியுயர் வெப்ப நிலை பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
இவர்கள் உரிய தருணத்தில் முறையான மற்றும் முழுமையான சிகிச்சையை பெறாவிடில், உயிரிழப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பொதுவாக எம்மில் சிலருக்கு கோடை காலத்தில் காய்ச்சல் ஏற்படும். ஆனால் வெகு சிலருக்கு நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக அவர்கள் சூரிய வெளிச்சத்தின் போது குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மூன்று மணிக்குள் திறந்தவெளியில் ஏதேனும் பணியின் காரணமாக பயணிக்க நேர்ந்தால் அவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் அதியுயர் வெப்பநிலை பாதிப்பு ஏற்படக்கூடும்.
பொதுவாக உங்களுடைய சிறுநீர் அடர் நிறத்தில் வெளியேறினாலோ இயல்பான அளவைவிட சற்று குறைவாக வெளியேறினாலோ நீங்கள் நீர்ச்சத்து குறைபாட்டிற்காக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதனை துல்லியமாக அவதானித்து, கோடை காலத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டிலிருந்து வெளியில் செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் உங்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
சிலர் இந்த அறிகுறியை உணராமல் வெளியில் சென்றால் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழக்கூடும். வேறு சிலருக்கு உடல் வெப்பநிலை உயர்ந்து வலிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும் . இவர்களுக்கு உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
அத்துடன் கோடை காலத்தில் அதீத வெப்ப நிலையை எதிர்கொள்வதற்கான தற்காப்பு முறைகளை வைத்தியர்களிடமும் , சுகாதாரத் துறை ஊழியர்களிடமும் முறைப்படியான விழிப்புணர்வை பெற்று அதனை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
வைத்தியர் அருணகிரி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM