'தும்பா' எனும் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமான நடிகர் தர்ஷன், அஜித் குமாரின் 'துணிவு ' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றி பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அவர் கதையின் நாயகனாக நடிக்கும் 'ஹவுஸ் மேட்ஸ் ' எனும் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் அவருடைய சொந்த பட நிறுவனம் மூலம் வழங்குகிறார்.
இயக்குநர் T. ஜெயவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஹவுஸ்மேட்ஸ்' எனும் திரைப்படத்தில் தர்ஷன் , காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி வைத்தியநாதன், அப்துல் லீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசை அமைத்திருக்கிறார்.
ஃபேண்டஸி வித் ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளேஸ்மித் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது இதனை சிவகார்த்திகேயனின் கனா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது.
நடிகர் தர்ஷனுக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் அவர் நடித்திருக்கும் ' ஹவுஸ்மேட்ஸ் ' எனும் படத்தை வழங்குவதன் மூலம் தன்னுடைய உதவியை அவர் தொடர்ந்திருக்கிறார். இப்படத்தின் காணொளி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM