நடிகர் விஷ்ணு மஞ்சு - சரத்குமார் - கருணாஸ் உள்ளிட்ட தமிழின் பிரபல நடிகர்கள் நடித்திருக்கும் ' கண்ணப்பா ' எனும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள ' கண்ணப்பா ' எனும் திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு , மோகன் பாபு , சரத்குமார் , மது, கருணாஸ், ஐஸ்வர்யா பாஸ்கரன், ப்ரீத்தி முகுந்தன், சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் மோகன்லால்- பிரபாஸ் - அக்ஷய் குமார் - காஜல் அகர்வால்- ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்டீபன் டெவாஸி இசையமைத்திருக்கிறார்.
இந்து மத புராண வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் கண்ணப்ப நாயனாரின் சரித்திரத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ வி ஏ என்டர்டெய்ன்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து இம்மாதம் 25 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த கண்ணப்பா திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் திட்டமிட்ட திகதிகள் படம் வெளியாகாது என்றும் , அதற்கு மாற்றாக எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று கண்ணப்பா திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் படமாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மூக பக்தி - கிராபிக்ஸ் - என இன்றைய ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப உருவாகி இருக்கும் கண்ணப்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெரும் என திரையுலாக வணிகர்கள் அவதானிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM